சிறப்பு செய்திகள்

“முதல் மாருதி 800 கார் உருவான கதை” - சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கார் இந்திய சாலையில் ஓடிய தருணம்!

காரின் சின்ன சின்ன செயல்பாடுகளை கூட மிகுந்த கவனத்துடன் கையாண்டிருக்கிறார். தந்தையின் இந்த செயல் சஞ்சய் காந்தியின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது...

Mahalakshmi Somasundaram

இந்தியாவின் முதல் சிறிய ரக கார் ஆன மாருதி 800 காரை முதன் முதலில் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஓட்டிய இந்திய விமான நிறுவனத்தின் பணியாளர் ஹர்பல் சிங். சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற காரை குர்கானில் உள்ள தொழிற்சாலை நிறுவனத்தின் வாசலில் இருந்து கிரீன் பார்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் ஒட்டி சென்றார். இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்திய சாலையில் ஒட்டப்பட்ட முதல் சிறிய ரக காராகும். இந்த கார் தயாரான கதை மிகவும் சுவாரசியமானது. காரணம் இந்த காரை உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி ஆவார்.

சிறு வயதிலிருந்தே கார்களின் மீது ஆர்வம் கொண்டிருந்த சஞ்சய் காந்திக்கு அவரது தந்தை தனது காரை கவனித்துக் கொள்ளும் விதம் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. சஞ்சய் காந்தியின் தந்தை மற்றும் இந்திரா காந்தியின் கணவரான ஃபெரோஸ் காந்தி தான் வைத்திருந்த கருப்பு நிற மோரிஸ் காரை மிகுந்த கவனத்துடன் பராமரித்திருக்கிறார். மேலும் அந்த காரின் சின்ன சின்ன செயல்பாடுகளை கூட மிகுந்த கவனத்துடன் கையாண்டிருக்கிறார். தந்தையின் இந்த செயல் சஞ்சய் காந்தியின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து உலக புகழ் பெற்ற கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு சென்று அவர்களின் கார் தயாரிக்கும் நுணுக்கங்களை கற்று கொண்டு மீண்டும் இந்திய திரும்பிய சஞ்சய் காந்தி புதிய கார் உற்பத்தி திட்ட ஒன்றை தொடங்கினர். அதன்படி இந்த மாருதி கற்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிலேயே விற்பனையும் செய்யபட்டது. இந்த திட்டத்தால் சாமானிய மக்களின் கார் வாங்கும் கனவானது நிஜமாக மாறியது. அப்போது ஹர்பல் சிங் கையில் முதல் முதலில் கார் சாவியை கொடுத்த இந்திரா காந்தி உரையாற்றினார்.

அதில் “இந்த காருக்கு முன்பு அப்படிப்பட்ட தூற்றுதல்களையும் குற்றச்சாட்டுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பது குறித்து நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த காரை தயாரிக்க எனது மகன் வெப்பமும், தூசியும் நிறைந்த பட்டறையில் இரவு பகல் பாராமல் உழைத்தார்” என தனது மகன் பட்ட தூரத்தை இந்திரா காந்தி அவர்கள் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு விவரித்திருப்பார். சஞ்சய் காந்தியின் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு இந்தியாவில் காரின் விநியோகத்தை விட தேவைகள் அதிகமாக இருந்தது என்பதை ரவீந்திர சந்திரா பார்கவா தனது “தி மாருதி ஸ்டோரி” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.