மாலை முரசு டிவியின் "நெற்றிக்கண்" விவாத நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) பெயர் மாற்றம் மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து சிபிஎம் கட்சியின் திரு. கனகராஜ் பேசிய காரசார கருத்துக்கள்,
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "அதாவது காந்தியின் மீதும் மக்களின் மீதும் உண்மையான அக்கறை எங்களுக்குதான் இருக்கு, உங்களுக்கு இல்ல அப்படின்னு சொல்றாங்க. முதல்ல இந்த 'ராம' பார்த்தா எங்களுக்கு ஏன் எரியுதுன்னு கேட்டாரு. எங்களுக்கு எரியல, நீங்க ராமனை ஒரு வியாபாரப் பொருளா பயன்படுத்துறீங்க.
சங்கப் பரிவார் எல்லாரும் பேச ஆரம்பிக்கும்போது எப்படி ஆரம்பிப்பாங்கன்னா 'ஜெய் ஸ்ரீராம்'னு ஆரம்பிப்பாங்க. தேர்தல்ல அயோத்தியில தோத்துப் போயிட்டோம், யுபியில (UP) தோத்துப் போயிட்டோம். உடனே 'ஜெய் ஜெகத்'னு பேசினாரா இல்லையா பிரதமர்? பிரதமர் தானே பேசினாரு? அப்புறம் சங்கப் பரிவார் யாராவது காந்தி கொலை வழக்கில் பேர் இருக்கா அப்படின்னு கேட்டார். இவங்க இல்லைன்னு சொன்ன பிறகு, கோபால் கோட்சே - நானு, என் சகோதரர்கள் எல்லாம் நாங்க வந்து ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில தான் வளர்ந்தோம், ஒரே ஃபேமிலியா தான் வளர்ந்தோம்னு அத்வானி இப்படிச் சொல்லியிருக்காரு.
அத்வானி பேசினதை ஒட்டி இது வந்தது, அவருக்கு முதுகெலும்பு இல்லை அப்படின்னு சொன்னவரு நாதுராம் கோட்சேவோட சகோதரர் கோபால் கோட்சே. "நாங்க அதைத்தான் செஞ்சோம், ஆனா எங்கள அப்படிச் சொல்லக்கூடாதுன்னு சொன்னாங்க" எனவே அவர் சொன்னாரு அப்படின்னு சொல்லியிருக்கார். அதை விடுங்க, இந்த பெயர்களின் மீது இவங்களுக்கு எப்போதுமே ஒரு வெறுப்பு உண்டு. முதல்ல நேரு பேரை எடுத்தாங்க, அப்புறம் இந்திரா காந்தி பேரை எடுத்தாங்க. அப்புறம் இவங்க வந்து காந்தியைப் பத்தி... ஆளையே போடு தள்ளியாச்சு, இது பேரா? அப்படிங்கிறதுதான் அவங்க எண்ணம்.
நெறியாளர் - அதை ஒரு பக்கம் தள்ளி வச்சா, காந்தி பிறந்த நாளைக்குத் தானே 'சுவச் பாரத்' திட்டத்தைக் கொண்டு வராங்க? அது காந்திக்கான மரியாதையா அவங்க செலுத்துனதா பார்க்க முடியாதா?
அதான் ராமே ஓட்டு தருவாருன்னா ராமனை கொண்டாடுவாங்க, இல்லைன்னா ராமனையே போட்டு தள்ளிறாங்கல்ல? அப்புறம் நீங்க காந்திய மாத்துறான், எனவே அதுக்குள்ள நம்ம போக வேண்டாம்.
பட், இப்ப சகோதரர் டால்பின் ஸ்ரீதர் ஒன்னு சொன்னாரு... "நாங்க வந்து அதை ரொம்ப ஸ்ட்ரென்தன் (Strengthen) பண்ணப் போறோம், அங்கன்வாடி கட்டடம் கட்டுறதுக்குப் பயிற்சி அளிக்கப் போறோம்" அப்படின்னு. அந்தத் திட்டம் என்னது? உங்க ஊர்ல ஒரு வேலையும் இல்லைனாலும் ஒரு ஏழை ஒருத்தர் "எனக்கு வேலை கொடுங்க"ன்னா நீங்க 15 நாளைக்குள்ள கொடுக்கணும். கொடுக்கலைனா அதுக்குச் சம்பளம் கொடுக்கணும். அது என்னது? வேலை உத்தரவாதப்படுத்துகிற சட்டம் திட்டம். இப்ப அவர் என்ன சொல்றாரு, "நாங்க பார்க்கப் போறோம்". அது யுனிவர்சல் (Universal). இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா கிராமங்களுக்கும் பொருந்தும்.
இவங்க என்ன சொல்றாங்கன்னா, சென்ட்ரல் கவர்மெண்ட் (Central Government) நோட்டிஃபை பண்ண ஏரியாவுக்கு மட்டும்தான் பொருந்தும்னு சொல்றாங்க. மூணாவது விஷயம் என்னன்னா, அவங்க வந்து வருஷத்துல 60 நாள் இல்லைன்றாங்க. அதை வந்து அவங்க என்ன சொல்றாங்கன்னா விவசாயத்துக்குப் பயன்படுத்தணும்னு சொல்றாங்க. விவசாயிகளுக்குப் போறதுன்னா... 600 ரூபாய் கூலி இருக்குன்னா, 400 ரூபாய் நீங்க விடுங்க, 200 ரூபாய் விவசாயி பண்ணிட்டுப் போறாரு. இது வேலை உத்தரவாதச் சட்டம் தானே? நீங்க ஒன்னும் நீங்க ஏரி வேலைக்கே போலனாலும் அவருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதுதான் சட்டம்.
சரி, அது வேலையை உத்தரவாதப்படுத்திருக்கு. அப்புறம் நாங்க அதை ஸ்ட்ரென்தன் பண்ணுவோம், நாங்க அதை அப்படிப் பார்ப்போம் இப்படிப் பார்ப்போம்னு சொல்றீங்க. நீங்க மோடி வந்ததுல இருந்து என்னெல்லாம் பண்ணி இருக்காருன்னு நான் மொத்தமா போட்டேன்னா ரொம்ப இதா இருக்கும். இப்ப சமீபத்துல அஞ்சு வருஷத்தை மட்டும் பார்ப்போம். 2020-21-ல பட்ஜெட் மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீடு, விடுவித்த நிதி - இந்த மூணும். 2020-21-ல 1,11,500 கோடி. இப்ப எவ்வளவு போன 2024-25-ல? 86,000 கோடி. எவ்வளவு வித்தியாசம்? இதுல ஒரு 14, அதுல ஒரு 11 - 25,500 கோடி ரூபாய், அதாவது 25% கட் பண்ணாங்க. விடுவித்த நிதியும் 1,11,000 கோடியில இருந்து 85,838 கோடியா குறைச்சிட்டாங்க.
ரெண்டாவது என்ன பண்ணாங்க? முதல்ல என்னன்னா முழுக்க முழுக்க வேலையாட்களுக்கான சம்பளம் முழுவதும் ஒன்றிய அரசாங்கம் கொடுக்கும். இந்த 10% என்பதே அதுக்கு உட்பட்டு இந்த சூப்பர்வைசரி ஜாப் (Supervisory Job) பாக்குறாங்க, தளவாடங்களுக்குக் கொடுப்பாங்க. அப்புறம் அது 25%ன்னாங்க. இப்ப என்ன சொல்லியிருக்காங்க 60:40. இல்ல மத்த இடத்துல உண்மையில இதுவரை வேலை வேண்டும் என்பதை யாரு தீர்மானிப்பா அப்படின்னு சொன்னா அந்தப் பஞ்சாயத்து தீர்மானிக்கும். இனிமே பஞ்சாயத்து எல்லாம் தீர்மானிக்க முடியாது. அவங்க மாநிலத்துக்கு மொத்தமா இவ்வளவு நிதின்னு கொடுத்துருவாங்க. மாநிலம் நினைச்சா இவருக்குக் கொடுக்கலாம் அல்லது அவருக்குக் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் போகலாம். அதுக்கு மேல செய்யணும்னு நினைச்சா 100% மாநில அரசாங்கம் தான் செய்யணும் என்று சொல்லியிருக்காங்க.
இந்த இடைப்பட்ட காலத்துல வேறு சில விஷயங்களை அவங்க பண்ணாங்க. ஒன்னு, இப்ப 100 நாள் வேலை யாருக்காவது கிடைச்சிருக்கா உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் 5 கோடியே 78 லட்சம் பேரில் வெறும் 7% பேருக்கு, அதாவது 47 லட்சம் பேருக்கு மட்டும்தான் என்ன கிடைச்சிருக்கு? 100 நாள் வேலை கிடைச்சிருக்கு. சராசரி வேலை எப்படி இருந்திருக்கு அப்படின்னு வந்தா, 2024-25-ல 50 நாள். அதுக்கு முந்தின வருஷம் 52, அதுக்கு முன்னாடி 60-ன்னு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இதை கொண்டு வந்துட்டாங்க.
உண்மையிலேயே இதை ஸ்ட்ரென்தன் பண்ணனும்னா அதைத் தானே பண்ணி இருப்பீங்க?
நெறியாளர் - இல்லைங்க, வெறும் கம்மா வெட்டுன்னுதான் இந்தத் திட்டத்தைக் குறைச்சு மதிப்பிட்டுப் பேசுவாங்க. இப்ப இதுல பல தளங்களை நாங்க ஒருங்கிணைச்சு இந்தத் திட்டத்தை வந்து ரொம்ப பெருசா பண்ணப் போறோம்னு இன்னைக்கு சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில பேசும்போது சொல்றாரு. "நாங்க இதை வலுப்படுத்த முயற்சிக்கிறோம், ஏன் உடனே காந்தி பேர் எடுக்கறீங்க? ராமராஜ்யம் அமைக்கிறதுதான் காந்தியினுடைய கனவு, அதை நோக்கி வலுப்படுத்தப் போனா உங்களுக்கு என்ன சிக்கல்?" அப்படின்னு கேட்குறாங்க. ஒரு சாதாரணமா இருக்கக்கூடிய ஒரு திட்டத்தை இன்னும் பெரிய அளவுக்குப் பண்ணும்போது இந்த மாதிரி வர்ற சிக்கல்களை ஏன் பெருசுப்படுத்துறீங்கன்னு கேட்குறாங்க
இல்ல, ரெண்டுக்கும் அடிப்படையான பிரச்சனை இருக்குங்கறதைச் சொல்றேன். ஒரு ஊரு தன்னிறைவு பெற்றுவிட்டது, ஆனால் அந்த ஊரில் ஏழைகள் இருக்கிறார்கள். அவர் இந்த வேலைக்குப் போகணும்னு நினைக்கிறார். இப்ப மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுக்குறாங்கல்ல, அதுல வேலை கொடுப்பீங்களா நீங்க? அந்த வேலைக்கு எப்படி நீங்க வேற எந்தத் திட்டத்திலயாவது அப்படி இருக்கா? இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு வருதுன்னா, வேலையை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக ஒரு தனிநபருடைய எம்ப்ளாய்மென்ட்டை (Employment) அவர் அன்னைக்கு அவரைச் சாப்பிடுறதுக்குக் கொடுக்கறது... இது ஒரு பகுதி.
நெறியாளர் - அதா 125 நாள் எக்ஸ்டென்ட் (Extend) பண்ணிருக்காங்க... இல்ல?
அதுதான் நீங்க ரெண்டு கோடி வேலை அதெல்லாம் பாத்துருக்கோம்ல? ஒன்றரை மடங்கு விவசாய விளைபொருள்களுக்கு விலை, 2022-க்குள் விவசாயிகளுடைய வருமானத்தை ரெட்டிப்பாக்குவது இப்படி நிறைய எல்லாம் பார்த்திருக்கோம்ல நாம? நீங்க 125 நாள் வேலை எப்படி கொடுப்பீங்க எங்களுக்குத் தெரியாதா? அதுக்கு என்ன சட்டத்துல உத்தரவாதம் என்ன இருக்கு? அதுல என்ன இருந்ததுன்னா நான் வேலை கேட்டா கொடுக்கணும்னு இருந்தது. இதுல என்ன உத்தரவாதம் இருக்கு?
இது எல்லாத்தையும் விட இப்ப நாங்க வேலை செஞ்ச உடனே உங்களுக்குக் கூலி கிடைக்கும். ஏன் இப்ப என்ன கசக்குது? ஒருவர் இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புற்ற பிறகு 18 லட்சம் கோடி இந்த சாதாரண ஏழை மக்களும் கொடுத்த வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் இருந்து அம்பானி, அதானி மாதிரியான ஆட்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கீங்க. எது விட்டு கொடுத்துட்டீங்க? லோனைத் தள்ளுபடி பண்ணிட்டீங்க. இது இத்தனை வருஷமும் சேர்த்து மொத்தமா பார்த்தா கூட அவ்வளவு தொகை வராது.
அது தவிர நீங்க இப்ப எவ்வளவு... தமிழ்நாடு முதலமைச்சர் 12/12/2022-ல ஒரு கடிதம் எழுதுறார் யாருக்கு? பிரதமருக்கு. "ஐயா சாதாரண ஏழைப்பட்ட ஜனங்கள் அவன் பாக்கெட்ல இந்த கூலி விழுந்தாதான் அவனுக்குத் தட்டுல சோறு விழும். ஏற்கனவே நீங்க 600 கோடி ரூபா அந்த ஜனவரிக்கு முன்னால பாக்கி வச்சிருக்கீங்க, உடனடியாகக் கொடுங்க"ன்னு. சோ அதுக்கு முன்னாலன்னு சொல்லும்போது அப்ப அவங்க எதைெல்லாம் கொடுக்கல? குறைஞ்சபட்சம் நவம்பர்ல கொடுக்கல, டிசம்பர்ல கொடுக்கல, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் - மே மாசம் முதல் வாரத்தில் 2999 கோடி ரூபா கொடுத்தாங்க. நீங்க யோசிச்சுப் பாருங்க, 210 நாளைக்கு முன்னால வேலை பார்த்தவருக்கு 210 நாள் கழிந்த பிறகுதான் நீங்க ரூபாயக் கொடுத்திருக்கீங்க. எதுக்கு? ஏன்? அதுக்குக் காரணம் என்ன? இல்ல கஜானால பணம் இல்லையா?
இல்ல நீங்க வந்து துணை மானியம், நாங்க அது பினான்சியல் கன்கரன்ஸ் (Financial Concurrence) வாங்கல, துணை மானியக் கோரிக்கைகள் இருந்தது அப்படின்னு ஏதாவது காரணம் இருந்ததா என்ன? திட்டமிட்டு ஒரு மாநிலத்தைப் பழிவாங்குகிற ஒரு அரசாங்கம் இங்கே இருக்கிற போது, நீங்க ஏற்கனவே சட்டம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தை எடுத்துவிட்டீர்கள் என்றால்... தமிழ்நாட்டுல நான் இப்ப சொல்றேன் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் சொன்னாரு, அவங்க அப்படி எல்லாம் நேரடியா அப்படி பண்ண மாட்டாங்க. என்ன பண்ண மாட்டாங்க? "அழிப்போம்"ன்னு சொல்லிட்டு வரமாட்டாங்க, "காப்பாத்துவோம்"ன்னு சொல்லிட்டு அதை அழிச்சுக்கிட்டே இருப்பாங்க.
நீங்க சொல்லுங்க, இன்னைக்குச் சொல்லுங்க, எய்ம்ஸ் (AIIMS)... இந்தியால நீங்க தமிழ்நாடு ஓரவஞ்சனைன்னா நீங்க நூத்துக்கணக்குல சொல்லலாம். நீங்க வந்து எல்லாத்துக்கும் ஒன்றிய அரசாங்கம் நிதி கொடுத்துட்டு தமிழ்நாட்டுக்கு மட்டும் ஜிக்கால (JICA) இருந்து வாங்கணும்னு சொல்லும்போது அதுக்கு என்ன அர்த்தம்? எனவே இது இது மட்டும்ல்ல மாநில அரசாங்கத்தை முடமாக்குற வேலை. நான் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லி முடிச்சிறேன். ஒன்னு பயிர் பாதுகாப்புத் திட்டம். அதை வந்து நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வர்றதுக்கு முன்னால அந்த காப்பீட்டுத் திட்டத்துக்குக் கட்டுறதுல 2% அதாவது பிரீமியத்துல 2% விவசாயி கட்டுவார், 49% ஒன்றிய அரசு கட்டியது, 49% மாநில அரசு கட்டியது.
2016-17-க்கு பின்னால நரேந்திர மோடி அதை மாடிஃபை (Modify) பண்ணாரு. "இந்தா பார் 25% தான் கட்டுனா கட்டு இல்லைன்னா நீ விவசாயிட்ட வாங்கிட்டோ"ன்னு ஒரு ஆர்டர் போட்டுப் போயிட்டாரு. இப்போ அந்த 25% போக 24%த்தை ஒன்னு தமிழ்நாடு அரசாங்கம் கட்டணும் இல்லைன்னா விவசாயிட்ட வாங்கணும். விவசாயிட்ட போட்டா விவசாயியோட நேரடியா தொடர்பு கொள்றது யாரு? மாநில அரசாங்கம். எனவே வேற வழி இல்லாம மாநில அரசாங்கம் அதையும் சேர்த்து இன்னைக்கு என்ன இருக்குன்னா 2% விவசாயி, 25% ஒன்றிய அரசாங்கம், 73% மாநில அரசாங்கம். 2016-17-ல 566 கோடியாக இருந்த மாநில அரசோட கமிட்மென்ட் (Commitment), 2023-24-ல 2,250 கோடியா மாறிருச்சு. இந்த கேப் இருக்குல்ல, இந்த 2,250 கோடி என்னன்னா தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு திட்டங்களுக்கு அதுவரை பயன்படுத்திக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தாமல் இவங்க பண்றாங்க.
சரி நீங்க லோன் வாங்கப் போகலாம் அப்படின்னு சொன்னா, ஜிஎஸ்டிபில (GSDP) 3%க்கு மேல லோன் வாங்க முடியாது. அதுக்கு மேல நான் வாங்கணும்னா மின்சாரத்தை எல்லாம் தனியாருக்குக் கொடுத்துரு, 0.25% உயர்த்தித் தாரேன்னு சொல்றாங்க. உங்களை எப்படி ஒரு மாநில அரச முடக்குறாங்க? போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (Post Metric Scholarship) பிரிட்டிஷ்காரன் காலத்தில இருந்து பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியின மக்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தாங்க. யார் கொடுத்தா? ஒன்றிய அரசாங்கம் 75%மும் மாநில அரசாங்கமும் 25%மும் கொடுத்தாங்க.
15, 16, 17-ல நம்ம கருணை வள்ளல் மோடி நிப்பாட்டிட்டார். அப்புறம் சண்டை போட்ட பிறகு 60:40-ன்னு சொன்னாங்க. 60:40 கொடுத்த பிறகு என்ன மாதிரி கொடுத்தாங்கன்னு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு கடிதம் எழுதியிருக்கார். "ஐயா நீங்க 60:40-ஆ மாத்துனீங்க, அந்த நாங்க தமிழ்நாட்டுல 7,000 சொச்சம் கோடி செலவழிச்சிருக்கோம், 4,300 கோடிக்கு மேல நீங்க எங்களுக்குத் தரணும், வெறும் 1,700 கோடி தான் கொடுத்துருக்கீங்க, எட்டு மாதத்துக்கு மேல ஆச்சு" அப்படின்னு.
அப்ப என்னன்னா கொஞ்சம் கொஞ்சமாக சென்ட்ரலி ஸ்பான்சர்டு ஸ்கீம் (Centrally Sponsored Scheme) இருக்கு பார்த்தீங்களா, அதுல ஒன்றிய அரசாங்கத்தினுடைய பங்கைக் குறைத்துக் கொண்டே வருவதன் மூலம் மாநில அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்துவது. அப்ப மாநில அரசாங்கம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே மாநில உரிமைகளை ஒன்றுமல்லாமல் செய்வதற்காகவும், இந்த மாதிரி ஏழை எளிய மக்களைப் பற்றி அவங்க கவலைப்படாம இருந்தாதானே இந்த மாதிரி கடப்பாறையைத் தூக்கிட்டு வருவாங்க, அதற்கான ஏற்பாடாகவும் இதை இவங்க செய்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.