"உச்சத்தை தொட்ட முட்டை விலை" - எத்தனால் காரணமா? E20 கொள்கையால் பாதிப்பு!| Explaine  AI Generated
சிறப்பு செய்திகள்

அடேங்கப்பா.. உச்சத்தில் முட்டை விலை! எத்தனால் காரணமா? E20 கொள்கையால் பாதிப்பு!| Explained

மக்கா சோளம் அறுவடையில் பெருவாரியான பங்கு எத்தனால் வடிப்பாலைகளுக்கு (Ethanol Distilleries) செல்வதானால் முட்டை கோழிப் பண்ணைக்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது.

மாலை முரசு செய்தி குழு

சர்க்கரை விலை ஏற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவில் முட்டை விலை ஏற்றத்துக்கும் எத்தனால் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறும் தரவுகள் வெளியாகியிருக்கின்றன.

எத்தனால் உற்பத்தி காரணமாக மக்காச்சோளத்தின் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இந்தக் குளிர்காலத்தில் விலை மேலும் உயரும் என கோழிப்பண்ணைத் துறை நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC), கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி முட்டை விலை ஏற்றம் 40% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. தற்போது முட்டையின் பண்ணை விலை 7 ரூபாயாக இருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் முட்டையின் சில்லறை விலை 8.50 முதல் 9 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு சில்லறை விலையே 7 ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

NECC கூறுவதன்படி, பண்ணை கோழிகளுக்கு கொடுக்கப்படும் முக்கிய உணவுப் பொருளாக மக்கா சோளம் உள்ளது. கோழி வளர்ப்புக்கு ஆகும் செலவில் 65-70% தீவனத்துக்கான செலவீனம்தான்.

இந்த ஆண்டு மக்கா சோளம் அறுவடையில் பெருவாரியான பங்கு எத்தனால் வடிப்பாலைகளுக்கு (Ethanol Distilleries) செல்வதானால் கோழிப்பண்ணைக்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது. இருப்பை விட தேவை அதிகரித்திருப்பதானால் மக்கா சோளத்தின் விலை ஏறியிருக்கிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டன் மக்கா சோளம் 14,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை 26,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டுமே 2500 ரூபாய் உயந்திருக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC)

இந்தியாவில் எத்தனால் உற்பத்தி செய்ய மக்கா சோளமும், கரும்புமே முக்கிய மூலப் பொருட்களாக இருக்கின்றன. 20% எத்தனால் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களின் விலைஏற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒப்பீட்டளவில் பெட்ரோல் தயாரிப்பு விலை குறைவாகவே இருக்கும். ஆனால் அந்த விலைக் குறைப்பு சில்லறை பெட்ரோல் விற்பனையில் எதிரொலிக்கவில்லை. மாறாக பல்வேறு காரணங்களால் பெட்ரோல் விலை மென்மேலும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

அதேநேரத்தில் கரும்பு மற்றும் மக்கா சோளம் போன்ற விவசாய மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அடிப்படை அன்றாட தேவைகளின் விலை கடுமையாக ஏறிவருக்கிறது.

நாடாளுமன்றத் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தி சுமார் 43.4 மில்லியன் டன்களாகும். இதில் கிட்டத்தட்ட 17 மில்லியன் டன்கள் தற்போது எத்தனால் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவு, 2022-ல் 1 மில்லியன் டன்களுக்கும் குறைவாக இருந்து, 2024-ல் 6 மில்லியன் டன்களாகவும், தற்போது 17 மில்லியன் டன்களாகவும் கடுமையாக அதிகரித்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 25 மில்லியன் டன்களை எட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

EGG

இந்தியாவின் மக்காச்சோள உற்பத்தியில் சுமார் 60 சதவீதத்தை கோழி வளர்ப்புத் துறை பயன்படுத்துகிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்களும் இதில் போட்டியாளர்களாக இணைந்துள்ளதால் கோழிப் பண்ணைகள் திணறி வருகின்றன.

எக்கானாமிக்ஸ் டைம்ஸ் தளத்தின் செய்தி அறிக்கையின்படி, மக்காச்சோளப் பற்றாக்குறையைத் தாண்டி, வெப்ப அழுத்தம், இறப்பு விகிதங்கள், வானிலை சீர்குலைவுகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் தீவனப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கின்றன.

முட்டை, சர்க்கரை மட்டுமல்லாமல் சமீப காலத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் வெங்காய விலை 45 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த பதினைந்து நாட்களில் வெல்லத்தின் விலை சுமார் 25% உயர்ந்து, ஒரு கிலோவின் சராசரி சில்லறை விலை ரூ.65 ஆக அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்தில் சமையல் எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 15% உயர்ந்து, ஒரு லிட்டரின் சில்லறை விலை ரூ.200-ஐத் தாண்டியுள்ளது.

நாடே விலை ஏற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழல் நிலவுகிறது. மத்திய அரசு இந்த போக்கை நிறுத்த ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்