ஆன்மீகம்

2026 மாசி மாத ராசி பலன் - மன நிம்மதியை அடையப்போகும் மூன்று ராசிகள்!

சில நேரங்களில் தேவையற்ற அகந்தை, தன்னம்பிக்கை அதிகரித்து பிடிவாதமாக மாற வாய்ப்பு உள்ளது...

மாலை முரசு செய்தி குழு

ஜோதிடத்தில் சூரியன் என்பது மனிதனின் ஆத்மா, தன்னம்பிக்கை, தலைமைத்திறன், புகழ், அதிகாரம் போன்றவற்றை குறிக்கும் முக்கிய கிரகமாகும். கும்ப ராசி என்பது சனி கிரகத்தின் ஆட்சியில் உள்ள ராசியாகும். சமூக சிந்தனை, புதுமை, மனிதநேய உணர்வு, அறிவியல் மனப்பான்மை போன்றவற்றை பிரதிபலிக்கிறது. இத்தகைய கும்ப ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் போது, ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்கள் கிடைக்கின்றன.

இந்த நிலையில், துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.

துலாம் ராசி பலன்:

கும்பத்தில் சூரியன் இருக்கும்போது... கும்பம் துலாம் ராசிக்கு ஐந்தாம் இடமாகும். இந்த இடம் கல்வி, புத்திசாலித்தனம், படைப்பாற்றல், குழந்தைகள், காதல் வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கல்வி தொடர்பான முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. கலை, எழுத்து, இசை போன்ற படைப்புத் துறைகளில் ஈடுபட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். திருமணத்துக்கு முன் காதல் உறவுகள் வலுப்பெறும். சமூக வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே மதிப்பு உயரும்ஆனால் சில நேரங்களில் தேவையற்ற அகந்தை, தன்னம்பிக்கை அதிகரித்து பிடிவாதமாக மாற வாய்ப்பு உள்ளது. அதனால் பிறரின் கருத்துகளையும் மதித்து நடப்பது நல்லது.

சுருக்கமாக சொல்லப்போனால்...

கல்வி, அறிவு, திறமை வளர்ச்சி அதிகரிக்கும்.

புதிய யோசனைகள், படைப்பாற்றல் மேம்படும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

சமூக வட்டாரத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம் ராசி :

கும்பத்தில் சூரியன் இருக்கும்போது... கும்பம் விருச்சிகம் ராசிக்கு நான்காம் இடமாகும். இந்த இடம் வீடு, சொத்து, வாகனம், தாய், மன அமைதி ஆகியவற்றை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் வீடு, நிலம், வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான வழக்குகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை மேம்படும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மன அமைதி கிடைக்கும். வேலை தொடர்பாக பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். ஆனால் குடும்ப விஷயங்களில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சொத்து விஷயங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

சுருக்கமாக சொல்லப்போனால்...

வீடு, நிலம், வாகனம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம்.

மன அமைதி கிடைக்கும்.

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி:

கும்பத்தில் சூரியன் இருக்கும்போது...கும்பம் தனுசு ராசிக்கு மூன்றாம் இடமாகும். இந்த இடம் தைரியம், முயற்சி, சகோதரர்கள், தொடர்பு, பயணம் ஆகியவற்றை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சகோதரர்களுடன் உறவு மேம்படும். அவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். சிறு பயணங்கள் அதிகரிக்கும். அவை உங்களுக்கு நல்ல அனுபவங்களை தரும்.ஊடகம், விற்பனை, விளம்பரம், எழுத்து, சமூக ஊடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.ஆனால் அவசரமாக முடிவெடுப்பது, தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவது போன்றவை பிரச்சினை ஏற்படுத்தலாம். அதனால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

சுருக்கமாக சொல்லப்போனால்...

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளில் வெற்றி.

சகோதரர்களுடன் உறவு மேம்படும்.

பயணம், தொடர்பு, ஊடகம் தொடர்பான துறைகளில் வளர்ச்சி.

வியாபாரம், விற்பனை, விளம்பரம் போன்றவற்றில் லாபம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.