AI Image
ஆன்மீகம்

பூசாரி வீட்டு முற்றத்தில் நிகழ்ந்த தெய்வீக அதிசயம்! அம்பாக அவதரித்த சுவாமி ஐயப்பனின் சிலிர்க்க வைக்கும் வரலாறு

புராணக்கதைகளையும் மற்றும் ஆன்மீக சக்தியின் வெளிப்பாடாகவும் விளங்கும் இக்கோவில் கேரள பாணியில் பழமை மாறாது காட்சித்தருகிறது

மாலை முரசு செய்தி குழு

சுவாமியே சரணம் ஐயப்பா!" என்ற தாரக மந்திரம் ஒலிக்கும் இடமெல்லாம், தன் அருள் மழையைப் பொழிந்து பக்தர்களைக் காக்கும் கலியுக வரதன் நம் ஐயப்பன். எருமேலியில் வாசம் செய்து, சபரிமலையில் பதினெட்டுப் படிகளுக்கு மேல் ஜோதி சொரூபமாய் வீற்றிருந்து, உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அபயஹஸ்தம் அளித்து அருள்பாலிக்கிறார்.

தர்மத்தை நிலைநாட்டவும், கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்யவும் அவதாரம் எடுத்த ஐயப்ப சுவாமி, தன் திருவடி பதித்து நடந்து வந்த புனிதப் பாதைகள், தங்கி வாழ்ந்த இடங்கள், தன் அருள்பார்வையால் ஆட்கொண்ட பக்தர்கள் எனப் பல திருத்தலங்களில் இன்றும் உயிர்ப்புடன் கூடிய இறைசக்தியாக எழுந்தருளியுள்ளார்.

அப்பேர்ப்பட்ட தெய்வீக மணங்கமழும் புனித ஆலயங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன? அந்தத் தலங்களின் வரலாற்றுச் சிறப்புகளும், ஐயப்பன் நிகழ்த்திய அற்புதங்களும் என்னென்ன? என்பதைப் பற்றிய ஒரு தெய்வீகப் பயணத்தை நாம் இனி காண்போம்.

தர்மத்தை நிலைநாட்டவும், கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்யவும் அவதாரம் எடுத்த ஐயப்ப சுவாமி, தன் திருவடி பதித்து நடந்து வந்த புனிதப் பாதைகள், தங்கி வாழ்ந்த இடங்கள், தன் அருள்பார்வையால் ஆட்கொண்ட பக்தர்கள் எனப் பல திருத்தலங்களில் இன்றும் சாந்நித்தியத்துடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

அப்பேர்ப்பட்ட தெய்வீக மணங்கமழும் புனித ஆலயங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன? அந்தத் தலங்களின் வரலாற்றுச் சிறப்புகளும், ஐயப்பன் நிகழ்த்திய அற்புதங்களும் என்னென்ன? என்பதைப் பற்றிய ஒரு தெய்வீகப் பயணத்தை நாம் இனி காண்போம்.

பூசாரி வீட்டு முற்றத்தில் அம்பாக அவதரித்த சாஸ்தா!

கேரளாவில் மயக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் அதன் பசுமையான மலைகள், அருவிகள் நிறைந்த நீர்வீழ்ச்சிகள், அழகிய ஏரிகள் மற்றும் ஏராளமான வன விலங்குகளுடன்,பழமையான கலாச்சாரங்களை கொண்டு காட்சியளிக்கிறது.

இடுக்கி, தமிழ்நாட்டின் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டமாக இருப்பதால், இங்கு பழங்குடி கலாச்சாரங்களுடன் தமிழ் கலாச்சாரத்தின் செல்வாக்கும் மேலோங்கி நிற்கிறது.

நிசப்தமான மலைகளும் சலசலக்கும் அருவிகளில் சப்தங்களுக்கிடையே பழங்குடியின மக்கள் வாழும் அரக்குளத்தில் அனைவரையும் காக்கும் தெய்வமாய் வீற்றிருக்கிறார் சுவாமி ஐயப்பன்

புராணக்கதைகளையும் மற்றும் ஆன்மீக சக்தியின் வெளிப்பாடாகவும் விளங்கும் இக்கோவில் கேரள பாணியில் பழமை மாறாது காட்சித்தருகிறது

நிசப்தமான சூழலில் நிறைந்த சைதன்யத்தோடு காட்சியளிக்கும் இக்கோவில் சுவாமி அய்யப்பனே விரும்பி வந்து கோவில் கொண்டதாக தலப்புராணங்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை தர்ம சாஸ்தா கோயிலில் ஐய்யப்பனுக்கு சிறப்பான பூஜைகள் செய்து வந்த பூசாரி ஒருவர் தனக்கு வயதாகி விட்டதால் மலை ஏறி பூஜை செய்யமுடியாமல் மனம் வருந்தியுள்ளார்.

தன்னால் சாஸ்தாவுக்கு செய்ய வேண்டிய புனித கடமைகளை செய்ய முடியவில்லையே என கண்ணீர் சிந்தினார். என் கண்ணான இறைவனை காணாமல் போய்விடுமோ என கலங்கினார். இதனையடுத்து ஒரு நாள் இரவு, பகவான் தர்ம சாஸ்தா அவருக்கு கனவில் தோன்றி இனி நான் உன் இல்லத்தில் இருக்கும் முற்றத்திலே குடியிருப்பேன் நீ எப்போதும் போல் எனக்கு ஆராதனை செய் என்று தெரிவித்துள்ளார்.

மறு நாள் கனவில் தோன்றிய கருணைக்கடலாம் ஐய்யபன் பூசாரியின் வீட்டு முற்றத்தில் ஒரு அம்பு ரூபமாக தோன்றி தன் காருண்யத்தை பூசாரிக்கு காண்பித்தார்.

இதனையடுத்து அம்பு வடிவில் வந்த இறைவனை கண்ட பூசாரி அதே இடத்தில் சாஸ்தாவின் சிலையை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி வணங்கி வழிபட்டதாக கூறப்படுகிறது.

கேரள பாணியில் மரங்களாலும் ஓடுகளாலும் உருவாக்கப்பட்ட கூறையின் கீழ் சாஸ்தா அம்பு எய்த இடத்தில் கருவறை அமைந்திருக்க அங்கு அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

இக்கோவிலில் இரட்டை ஸ்ரீ-கோவில் வளாகங்கள், துணை சன்னதிகள், நாத பந்தல் போன்றவைகள் காணப்படும் நிலையில் தனிசன்னதியில் அமர்ந்த நிலையில் விநாயகர் அருள் பாலிக்கிறார்.

வடமேற்கில் மேற்கு நோக்கிய சன்னதியில் மாலிகாபுரத்தம்மா பஞ்சலோக கண்ணாடி வடிவ சிலை வடிவத்தில் காட்சியளிப்பதோடு அருகில் நாகர் சிலைகளும் காணப்படுகிறது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஏழு நாட்களிலும், நவம்பர் முதல் டிசம்பர் மாதத்தில் மண்டல கால விழாக்களும் இக்கோவில் கலச பூஜைகளும் மாலிகாபுரத்தம்மாவின் சன்னதியில் குருதி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

குறிப்பாக இவ்விழாவின் போது சபரிமலை தர்ம சாஸ்தா கோயிலின் ஆராட்டுக்குப் பயன்படுத்தப்படும் கொடி அங்கிருந்து அரக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆராதிக்கப்படுவது சிறப்பிற்குரியதாக கருதப்படுகிறது

தன்னை வணங்கும் பக்தர்களை காக்கும் கடவுளாக இருக்கும் ஐயப்பன் இந்த அரக்குளம் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் காருண்ய தெய்வமாக வீற்றிருப்பதால் பக்தர்களின் குறைகளை ஒரு தந்தையை போல இருந்து நீக்குவதாகவும் , திருமணத் தடைகளை நீக்குவது, வியாபார விருத்திக்கு அருள்வது , தீய சக்திகளை அழிப்பது போன்ற பல நன்மைகளை அருள்கிறார் என்று மக்களால் நம்பப்படுகிறது. .

மாலைமுரசு செய்திகளுக்காக கலைமாமணி நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.