AI Generated Image
ஆன்மீகம்

பிரம்ம சூத்திர கோடுகள் கொண்ட அதிசய சிவலிங்கம்! சோழப் பேரரசி குந்தவை நாச்சியார் எழுப்பிய 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்!

இக்கோவில் கல்லிலே கலைகளை செதுக்கி ஒரு கலைக்கூடம் போல் காட்சியளிப்பதோடு, கருவறையில் வீற்றிருக்கும்.

Nanda Kumar (நந்த குமார்)

மும்முடி வேந்தன், பொன்னியின் செல்வன் மாமன்னன் ராஜேந்திர சோழனின் தங்கையான குந்தவை நாச்சியார் தனது சகோதரனான ஆதித்த கரிகாலச்சோழனின் நினைவாக விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் ரவிகுல மாணிக்க ஈஸ்வரன் என்ற கோவிலை எழுப்பினார்

இக்கோவில் கல்லிலே கலைகளை செதுக்கி ஒரு கலைக்கூடம் போல் காட்சியளிப்பதோடு, கருவறையில் வீற்றிருக்கும். இறைவன், மாமன்னர் ராஜராஜனின் பெயரான ‘ரவிகுல மாணிக்க ஈஸ்வரர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறார்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் மிகக் கம்பீரமாகக் காட்சி அளிகக்கும் இந்த கோவிலின் நுழைவு வாயிலில், காணப்படும் பாம்பு போன்ற உருவத்தால் இந்த கோவிலும் இதனை சுற்றியுள்ள இடங்களும் இயற்கை பேரிடர்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்பபடுகிறது.

கோவிலில் உள்ளே கருவறையில் இருக்கும், லிங்கத் திருமேனியர் ரவிகுல மாணிக்க ஈஸ்வரர், மாணிக்க ஈஸ்வரர், பால்வண்ண ஈஸ்வரர், பால்வண்ண நாதர் என்று பல பெயர்களோடு அழைக்கப்படுகிறார். இந்த சிவலிங்கத்தின் மேல் பிரம்ம சூத்திர கோடுகள் என்னும் சக்தி மிகுந்த வரிகள் காணப்படுவதால் இந்த இறைவனை வழிபடும் போது சகல ஞான சித்திகளும் பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது

கருவறையில் உலகைக்காப்பவர் வீற்றிருக்கும் வேளையில் வெளியே அவருக்கு காவலாக இருக்கும் துவாரபாலகரின் சிலை சிந்தையை மயக்கும் வகையில் அமைக்கப்படுள்ளது. கலைச்சிற்பத்தின் சிகராமாய் வடிவமைக்கப்பட்ட்டிருக்கும் துவாரபாலகர் சிலையில் நுனுக்கமாக செதுக்கப்பட்ட முகமும்,அதில் காணப்படும் கூரிய பற்களும் அணிகலன்களும் சோழர் கால சிற்பகலையின் சிறப்புக்களை எடுத்துரைக்கிறது

இக்கோவிலில் காமட்சி என்ற பெயரோடு கருணைத்ததும்ப காட்சிதரும் அம்மனுக்கு ஆடிப்பூரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி கண்டால் பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது

இங்குள்ள துர்க்கை அம்மன் எருமைத் தலையின்மீது பாதம் பதித்து எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பதோடு . ராகு காலத்தின் இந்த அன்னையை தரிசித்து வழிபட்டால், நாகதோஷங்கள் விலகுவதாக ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலயச்சுற்றுப்புற சுவர்களில் பழங்கால கல்வெட்டுகள் சோழர்களின் சாதனைகளை எடுத்துரைப்பதோடு இக்கோவிலின் தெய்வீக தகவல்கள்களையும் அவைகள் அளிப்பதாக கூறப்படுகிறது

நிறுத்தக் கணபதி, திருமால், முருகப்பெருமான், தட்சணாமூர்த்தி,.துர்கை, நான்முகன், பைரவர், காளிங்கநாதர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவகிரகங்கள், சூரிய பகவான் ஆகியோரும் நந்தி பகவானுக்கும் இங்கு தனிச்சன்னதி கொண்டு காட்சி தருகின்றனர்

பாறைகளால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரில் ஒரு விரல் அளவே உள்ள இடத்தில் போர் வீரரின் சிலை, உள்ளங்கை அளவே இருக்கும் இடத்தில் கண்ணப்பநாயனாரின் கதை என்று குறுகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது .

கருவறையில் உள்ள ரவிகுல மாணிக்க ஈஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டால், நிலம் சார்ந்த வழக்குப் பிரச்னைகள், திருமணத் தடைகள், உறவுகளுடனான பிரச்னைகள் ஆகியவை விலகும்; மன நிம்மதி உண்டாகும்

தெய்வீகமும், சிற்ப்பகலைகளின் சங்கமும் நிறைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலை காண்போம் சிவனை வணங்கி சிறப்பாய் வாழ்வோம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்