அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே, பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லை எனலாம்... அந்த அளவிற்கு பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது... பணம் இருந்தாலும் பிரச்சனை பணம் இல்லாவிட்டாலும் பிரச்சனை... அதிகப்படியான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மனங்களோடு போராடும் பிரச்சனை... உறவு முறைகளில் விரிசல்.... படிப்புக்காக திருமணத்திற்காக பொருளாதார வசதிக்காக நிச்சயமாக பணம் தேவைப்படும்... அந்த பணம் இல்லை என்றாலும் பிரச்சனை... காலத்திற்கு திருமணம் ஆகவில்லை, குழந்தை பிறக்கவில்லை, சொந்தமாக வீடு இல்லை, உறவினர்கள் மதிப்பதில்லை, நண்பர்கள் அதிகமாக இல்லை... தனிமை வாட்டுகிறது... சொல்லிக் கொண்டே போகலாம் இப்படியாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று ஒன்று நிச்சயமாக உண்டு... பிடித்த தெய்வத்தை வணங்கலாம்... ஏன் அந்த தெய்வம் நம்மளுடைய கஷ்ட காலங்களுக்கு உதவுவது இல்லை என்றும் கூட யோசிக்கலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக தீர்வு என்று ஒன்று ஏதாவது ஒரு வகையில் இருக்க தானே செய்யும்... அந்த தீர்வு நமக்கு பிடித்த முடிவாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை...
நம் முன்னோர்கள் நமக்கு செய்து விட்டுப் போன காரியங்கள் தான் கர்மாவாக நீங்கள் ஜெனித்த அந்த நொடியில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்... இதற்கு மாற்றம் உண்டா என்றால் மாற்றம் ஒன்றே மாறாதது தானே... அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் என்று ஒன்று உண்டு.. இருக்குமாம் காரணம் சூரிய ஒளியிலிருந்து சக்தியை பெறுவதற்காக.. அதனால்தான் சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்று கூறுகிறார்... உங்களுக்கும் சக்தி வேண்டும் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால் நீங்களும் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து குளித்துவிட்டு பூஜைகளை செய்து சூரியனுடைய வரவுக்காக காத்திருக்க வேண்டும்... நிச்சயமாக இழந்தவற்றை பெறுவதற்கான சக்தி உங்களுக்கு கிடைக்கும்..
உண்மையிலேயே இந்த செய்முறைகளை நீங்கள் பின்பற்றுவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் காரணம் 4.30 மணிக்கு காலையில் எழுந்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று... அதுவும் பனிக்காலங்களில் எழுந்திருப்பது முடியாத காரியமாக கூட இருக்கலாம்... ஒன்பது நாளைக்கு முதலில் தொடர்ந்து இப்படி காலையில் எழுந்திருப்பதை பயிற்சி செய்து பாருங்கள்... தடைபட்ட காரியங்கள் நடக்கலாம்.... அல்லது நீங்கள் எதிர்பார்த்த முடிவை விட நல்ல முடிவு உங்களுக்கு கிடைக்கலாம்...
வாழ்க்கையில் ஏதாவது ஒன்று கூட உங்களுக்கு நடைபெறலாம்... காலையில் எழுந்து மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்தப் பாருங்கள்... இது என்ன மூடநம்பிக்கை காலையில் வியாபாரம் செய்கிறவர்கள் கூட எழுந்திருக்கிறார்களே அவர்களுக்கு ஏன் எதுவும் நடப்பதில்லை என்று நம் மனதில் ஒரு கேள்வி எழலாம்... இங்கே தான் கதையில் ஒரு திருப்பம்... காலையில் எழுந்திருப்பது உங்களுடைய மன சுத்தத்திற்காக.. அமைதியாக பிரபஞ்சத்தோடு தியானத்தை பண்ணுங்கள்.. இந்த பிரபஞ்சம் உங்களிடம் பேச முயற்சி செய்யும்... அதை காது கொடுத்து கேளுங்கள்.... உங்களுக்குள் ஒருவித சக்தி உண்டாகும்... அந்த சக்தி பேராற்றல் ஆக மாறும்.... அவை பல விஷயங்களை வசீகரித்து உங்களுக்கு கொடுக்கும்...
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வியாபாரத்தை தொடங்கி இருக்கிறீர்கள் அந்த வியாபாரம் சரியாக போகவில்லை மக்கள் உங்களுடைய கடைக்கு வரவில்லை என்று வைத்துக் கொள்ளலாம்... அதிகாலையில் எழுந்திருங்கள் நன்றாக தியானம் செய்யுங்கள் கடைக்கு என்ன செய்தால் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் கடைக்கு என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை இந்த பிரபஞ்சமே உங்களுக்கு உணர்த்தி விடும்... குறிப்பாக ஒரு கடையில் நீல நிற பெயிண்ட் உள்ளது அது வசீகரிக்கும் படியாக இல்லை... மக்களுக்கு அது ஒரு பார்வையாக தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்... நீங்கள் காலையில் எழுந்திருக்கிறீர்கள் உங்களுடைய மூளையில் உதிக்கக்கூடிய எண்ணங்களில் நம் கடைக்கு என்ன தான் பிரச்சனை என்று சிந்திக்கும் பொழுது தான் எதை போட்டால் எது நடக்கும் என்பது போன்ற காரியங்களில் உங்கள் மனம் செல்லும்.... அதை அப்ளை செய்து பார்த்தால் நிச்சயமாக வெற்றியும் கிடைக்கும்.....
என்னுடைய கடைக்கு வெள்ளை நிற பெயிண்டை நான் பயன்படுத்தி அடுத்த மூன்று மாதத்திற்கு பார்க்கப் போகிறேன்... என்று முடிவு எடுக்கிறீர்கள், என்று வைத்துக் கொண்டால்... உங்கள் கடையை தாண்டி போன வாடிக்கையாளர்கள், சற்று கவனித்து ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணி உங்கள் கடையின் பக்கம் வருவார்கள்.... இது ஒரு விதமான வசீகரம்.... இதனால் தான் ஸ்டார் ஹோட்டல்களில் 'அம்பியன்ஸ்' என்று சொல்லக்கூடிய சுற்றுப்புறத்தை வசீகரிக்கும் படி வைத்திருப்பார்கள்.... மிதமான பாடல்... குளிர்ந்த ஏசி காற்று... உள்ளே வந்து விட்டால் அமைதியாக மனம் இருக்கும் படி அவர்களுடைய சுற்றுப்புறத்தை வைத்திருக்கும் அந்த வித்தையை உங்களுக்கு இறைவன் பிரபஞ்சத்தின் மூலமாக வழங்க வாய்ப்பு இருக்கிறது....
இப்படியாக எல்லா விதத்திலும் இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு வகையில் உங்களிடம் பேசிக் கொண்டே இருக்கும்..... திருமண காரியத்தில் கோளாறு.... மனைவியிடம் சதா சண்டை அல்லது கணவரிடம் சண்டை என்ன செய்வதென்று தெரியவில்லை? என யோசிக்கும் உங்களுக்கு.... காலை நேர அந்த எண்ண ஓட்டங்கள், உங்களை சற்று சாந்தப்படுத்தலாம் அல்லது உங்களை பார்க்கும் உங்களுடைய கணவனின் அல்லது மனைவியின் மனதை சாந்த படுத்தலாம்... இதன் மூலம் உங்களுக்கு எந்த விதமான சண்டையும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் கூட போகலாம்...
அன்பார்ந்த வாசகர்களே காலையில் 4:30 மணிக்கு எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் ஒரு ஐந்தரை மணிக்கு ஆவது எழுந்திருக்க முயற்சி செய்து பாருங்கள் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இறைவனிடம் சரணாகதி அடையுங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம்!!!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.