துரியோதன படுகள நிகழ்ச்சி Admin
ஆன்மீகம்

வரலாற்று சிறப்புமிக்க “துரியோதன படுகள நிகழ்ச்சி”..- பதினெட்டாம் போர் என்றால் என்ன தெரியுமா? பக்தியில் திளைத்த பக்தர்கள்!!

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் பாராம்பரியமிக்க துரியோதனன் படுகள நிகழ்ச்சிகள் பக்தி பரவசத்துடன் நடத்தப்பட்ட நிலையில் அது பற்றிய இப்போது காணலாம்.

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் திரௌபதி வழிபாட்டு மரபில், படுகளம் என்ற மைதானத்தில் மகாபாரதப் போர் நிகழ்வை நிகழ்த்திக்காட்டும் ஒரு நிகழ்ச்சியாகும்...

மகாபாரத பதினெட்டாம் போர் எனப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியின் மூலம் தீமைகள் அழிந்து நல்லது நடக்கவும் நோய் நொடியின்றி வாழவும் விவசாயம் செழிக்கவும் கிராமமக்களால் பக்திபரவசத்துடன் விமரிசையாக நடைத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய இடத்தில் நடத்தப்பட்டது.

இதில் 60 அடி நீளத்தில் துரியோதனன் திருவுருவ வடிவம் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில் வேடமணிந்த துரியோதனும், பீமனும் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டனர். அப்போது பீமன் துரியோதனனை படுகளத்தில் வதம் செய்த காட்சி நடத்திக் காட்டப்பட்டது. இதன் பிறகு, பீமன் மற்றும் துரியோதனனை அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் தோளில் தூக்கிச் சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக, துரியோதனனின் அம்மாவாக காந்தாரி வேடம் அணிந்த பெண் படுகளத்தில் உயிரிழந்த தனது மகனைப்பார்த்து அழுது ஒப்பாரி வைத்து தனது மனக்கவலையை தீர்த்துக் கொண்ட காட்சிகள் அரங்கேறின. அப்போது காந்தாரி வேடமடைந்த நபரிடம் சென்று பக்தர்கள் காணிக்கைகளை வழங்கி குடும்பத்துடன் ஆசீர்வாதம் பெற்று வழிபாட்டில் ஈடுபட்டனர்

இந்த நிகழ்ச்சியின் போது தெங்கால் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு படுகள நிகழ்ச்சிகளை கண்டு அம்மனை தரிசனம் செய்யதனர்

அதே போல திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே காரணை கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இதில பங்கேற்ற நாடக கலைஞர்கள், பீமன், துரியோதனன், மற்றும் காந்தாரி வேடம் அணிந்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். முன்னதாக திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்