தீய அமானுஷயங்களை அழித்து, நற்கருணை புரியும் கொல்லி மலை அம்மன், தெய்வீக சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிலையில் குடிகொண்டு, .திரண்ட மரங்களின் நடுவே . கொல்லிமலையில் கோவில் கொண்டுள்ளாள்.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது எட்டுக்கை மாரியம்மன் ஆலயம். ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு நடுவே,மேககூட்டங்கள் தவழ்த்து செல்லும் ரம்மியமான இடத்தில், அமைந்துள்ளது.
பிரமிக்கதக்க, கட்டிடகலைகள் நிறைந்த கோயிலாக இல்லை என்றாலும் அமானுஷ்யங்களை தன்னுள்ளே கொண்டுள்ள கோயிலாக திகழ்கிறது.
மேலும் படிக்க: தோல் நோய் நீங்கும் இடும்பன் சன்னதி - குன்றக்குடி முருகன் கோவில் தள வரலாறு
இந்த ஆலயம், சாலைக்கு இணையான சம தளத்திலோ அல்லது குன்றின் உச்சியிலேயோ அமைந்திருக்கவில்லை. மாறாக, மலை உச்சியிலிருந்து இரு கீழ்நோக்கிப் பல படிகள் கடந்து சென்றால் எட்டுகை அம்மன் ஓலை வேய்ந்த கூரையில்.வீற்றிருக்கிறார், செங்கற்களால் கட்டப்பட்டுள்ள கருவறையில் அம்மன் 8 கைகளுடன் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவாறு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் சதுரகிரியில் வாழ்ந்த சித்தர்கள் பல மலைகளைத் தாண்டி கொல்லிமலையை வந்தடைந்தபோது இங்குள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதியான மேல்களிங்கப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து தவம் செய்ய தொடங்கினர்.
அங்கே ஏற்கனவே இருந்த அசுரர்களும், மிருகங்களும் சித்தர்களை தொந்தரவு செய்ததால் அவைகளின் தீய சக்தியை தடுக்க மூலிகைகளால் ஒரு அம்மனை உருவாக்கினார்கள். சித்தர்களின் கண்ணுக்கு மட்டுமே அம்மன்குழந்தை வடிவில் காட்சி தந்ததால் இந்த அம்மனை கொல்லிப்பாவை எனவும். எட்டுக் கைககளுடன் காட்சியளிப்பதால், ‘எட்டுக்கை அம்மன்’ என்றும் அழைத்தனர்.
மேலும் படிக்க: சிவனும் விஷ்ணுவும் ஒன்றாய் அவதரித்த சங்கரநாராயணன் ஆலயம்
நேர்த்தியாக கட்டப்பட்ட படிக்கட்டுகளுடன் ஒரு சிறிய மலையில் உள்ள எட்டுகை அம்மன் கோயிலை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறம் அடிவாரத்தில் யானையுடன் அய்யனார் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.மேலும் விநாயகர் மற்றும் நாகர்கள் பிரதான கோவிலுக்கு அருகில் படிகளின் முடிவில் உள்ளனர்.
இங்குள்ள குகைகளில் இன்றும் சித்தர்கள் அரூபமாக இருப்பதாகவும் கூடு விட்டு கூடு பாய்கின்றனர் என்கின்ற செய்திகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே கிடைக்கும் ஒருவித மூலிகையை உட்கொண்டு சித்தர்கள் இன்றும் கண்களுக்கு தெரியாமல் தவம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மலை வாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கும் எட்டுக்கை அம்மனின் அருள் இருந்தால் மட்டுமே இக்கோயிலுக்கு வரமுடியும் என்றும் அவள் அனுமதியில்லாமல் ஒரு மூலிகைசெடியும் கொண்டுசெல்ல முடியாது என்கின்றனர் இங்குள்ள கிராமமக்கள்.
நிலம் சம்மந்தமான பிரச்னையை தீர்ப்பதற்காக இங்கு வரும் பக்தர்கள் சூலங்களில் பூட்டு பூட்டிவிட்டு செல்கிறார்கள். மேலும் உலோகத் தகட்டில் வேண்டுதல்களை எழுதி கட்டிவிட, வேண்டுதல்கள் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க: நிலப்பிரச்னைகள் தீர்க்கும் திருச்சுழி பூமிநாதர் கோவில்
இந்த அம்மன் பக்தர்களுக்கு பல வரங்களை வாரி வழங்கினாலும், குழந்தைப் பேறு அருளுவதில் வரப்ரசாதியான தெய்வமாகவே விளங்குகிறாள்.
அதை மெய்ப்பிப்பதைப் போல் மழலைச் செல்வம் வேண்டுவோர் இக்கோயில் மரக் கிளைகளில் தொட்டில்களைக் கட்டிப் பிரார்த்திப்பதைக் காணலாம்.
வாழ்வில் முன்னேற்றம் இல்லாம் துன்பப்படுபவர்கள் பசுநெய்,அல்லது காரபசுநேய் எடுத்து சென்று கோவிலுக்குள் தீபம் ஏற்றினால் தீராத பிரச்சினையெல்லாம் மூன்று மாதங்களுக்குள் தீர்த்துவைப்பாள்.
கொல்லிப்பாவக்கென்று உலகில் இங்கு மட்டுமே ஆலயம் இருப்பதால் அம்மாவாசை அன்று நடக்கும் பூஜைகளில் பங்கேற்போருக்கு சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஆண்டாண்டுகாலமாய் நிலவும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்