மலையனுர் எல்லையிலே பெரியாயி, மல்லார்ந்த பார்வையான பெரியாயி மக்கள் குறை தீர்க்கும் பெரியாயி, மனதார நினைத்தவருக்கு மனக்குறை தீரும்மம்மா, உளமார நினைத்தவருக்கு உள்ள குறை தீருமம்மா என்று அம்மாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் மடிப்பிச்சை ஏந்தும் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் எழுந்தருளியுள்ளது.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய இந்த கோவில் வீற்றிருக்கும் அங்காள பரமேசுவரி .அனைத்து யுகங்களுக்கும் முன்பே இத்தலத்திற்கு வந்து விட்டதாகவும் இங்குள்ள மண் புற்றில் குடியேறி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் கூறப்படுகிறது..
மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பின்னர் மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தக்கனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியின் அம்சமே அங்காளி என்பதால், ஆலயத்தின் முன் பகுதியில் பெரியாயி என்ற அம்மன் படுத்து கிடக்கும் கோலத்தில் சிலை வடிவில் காட்சியளிக்கிறாள். யாகத்தீயில் அம்மன் தன்னை அழித்து கொண்டதன் நினைவாக இங்கு வரும் பக்தர்கள் சாம்பலை பிரசாதமாக பூசாரிகள் வழங்கி வருகின்றனர்.
இத்தலத்தில் அம்மாவாசை நாட்களில் தங்கி அன்று நடக்கும் சிறப்புமிக்க அர்த்தசாம பூஜையை கண்டால் நோய்கள் தீர்ந்து நம்மை பிடித்துள்ள பிரச்சினைகள் தீரும் என்பதால் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.
கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றி வழிபாட்டால் தோஷங்கள் நீங்குவதாகவும் திருமண தடை நீங்கிய பெண்கள் இக்கோவில் மாங்கல்யங்களை காணிக்கையாகவும் வழங்கி நேர்த்திக்கடன் தீர்க்கின்றனர்
மாசி மாதத்தில் மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை விழாவில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் மயான தீயில் காய்-கனிகள் தானியங்கள்,சில்லரை காசுகளை வீசுகின்றனர். பின்னர் திருவிழா முடிந்ததும், அந்த மயானச் சாம்பலை எடுத்துச் சென்று தங்கள் வீடுகளில் துணியில் முடிந்துக்கட்டி வாசலில் தொங்கவிட, தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இருந்து வருகிறது.
அங்காள பரமேஸ்வரி இக்கோவிலில் உக்கிரத்துடன் காணப்படுவதால் அதனை தணித்து. சாந்தப்படுத்துவதற்காக மாசி மாதத்தில் தேர் திருவிழா இங்கு நடத்தப்படுகிறது.
அந்த தேரில் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் சக்கரங்களாகவும் அச்சாணியாகவும் மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசனமேடையாகவும் மாறி நிற்கும் நிலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதிவலம் வருவதாகவும் தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் தேரைவிட்டு மறைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் வாழும் மக்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தீராத தோஷங்களை தீர்த்தருளி, ஆராத வினைகளையும் ஆகற்றி மண்டியிட்டு கேட்டவரம் மாறாமல் அருளும் அங்காள பரமேஸ்வரியை இத்தலத்திற்கு சென்று வழிபடுவோம் நல்ல வரம் பெறுவோம்
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக செஞ்சி செய்தியாளர் நதீமுடன் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்