ஆன்மீகம்

புத்தாண்டு ராசிபலன் 2026 - மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்ள இருக்கும் கடக ராசி!

ராசியிலேயே உச்சம் பெறும் குரு பகவான் உங்களுடைய சக்தியை பற்றி மற்றவர்களுக்கு புரிய வைப்பார்...

மாலை முரசு செய்தி குழு

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 70% நல்ல பலன்களும் 30% எதிர்மறையான பலன்களும் கடந்த 2025-ல் நடந்திருக்கும்... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்ற வாசகத்தை கேள்விப்பட்டு இருப்பீர்கள் கடந்த 2025 அப்படிப்பட்ட காலகட்டம் தான் உங்களுக்கு.. மிகப்பெரிய சிக்கல்களில் இருந்து பிரச்சனைகளை சந்திக்காமல் மன நிறைவான இடத்திற்கு நீங்கள் நகர்ந்திருக்க வாய்ப்புண்டு.... வருகின்ற 2026 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்...

கடக ராசி அன்பர்கள் தாய் உள்ளம் கொண்டவர்கள்... அடுத்தவர்களுக்கு பெரிதாக தீங்கு நினைக்காமல் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும்... தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்... பிரச்சனைகள் போராட்டங்கள் வந்தால் கூட நிதானமாக கையாள தெரிந்தவர்கள்... ஒரு தாய் எப்படி தன் குழந்தையை பாதுகாத்து போஸ்த்து பிரச்சனைகளில் இருந்து குழந்தையை காப்பாற்றி வழி நடத்துவாரோ அதேபோல தான் கடக ராசி அன்பர்களும்.. மற்றவர்களை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி அவர்களை வழிநடத்துவதில் நீங்கள் வல்லவர்கள்....

உங்களுடைய ராசிக்கு ஜனவரி மாதம் முதல் மே மாதம் முடியும் வரை குரு பகவான் 12 ஆம் வீட்டில் பயணிக்கிறார்.. பிறகு மே மாதம் முடிய உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று பயணிக்கிறார்... இந்த காலகட்டங்களை இரண்டாக பிரிக்கலாம்... குரு பகவானால் வருடத்தின் முதல் ஆறு மாதம் பயணங்கள் அதன் மூலம் செலவுகள்.... சிறு சிறு அவமானங்கள்... மற்றவர்கள் நம்மளை குறைத்து மதிப்பிடுவது... நம்மளுடைய நிலைமையைப் பற்றி தாழ்வாக பேசுவது... போன்றவை நீங்கள் அவ்வபோது சந்திக்க நேரலாம்.. கவலை வேண்டாம் மே மாதத்திற்கு பிறகு ராசியிலேயே உச்சம் பெறும் குரு பகவான் உங்களுடைய சக்தியை பற்றி மற்றவர்களுக்கு புரிய வைப்பார்... அதாவது விலகி சென்றவர்கள் கூட விரும்பி வந்து பேசுவார்கள்....

உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் நீங்கள்தான் வேண்டும் என்று வந்து நிற்பார்கள்... உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் மன்னித்து விடுங்கள் என்று சரணாகதி அடையும் அளவிற்கு மே மாதத்திற்கு பிறகான காலகட்டம் அமையவிருக்கிறது... அதுவரை குருபகவானின் பன்னிரண்டாம் வீட்டு சஞ்சாரத்தால் திடீர் பயணங்களால் திக்கு முக்காடுவீர்கள்....

கையில் இருக்கும் பணம் திடீரென்று செலவாக வாய்ப்பு உண்டு.... குறிப்பாக மருத்துவத்தின் மூலம் ஏதேனும் செலவுகள் வந்தால் அதை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்... கடன் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது கடன் சுமை குறைய வாய்ப்பு அதிகம்..... குரு பகவானின் கடக ராசி சஞ்சாரம் ஜூன் மாதத்தில் இருந்து நீங்கள் வைத்தது தான் சட்டம்... நீங்கள் சொல்வது தான் நியாயம்.... உதவிகள் உங்களைத் தேடி வரும்... கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்... உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி ஆதாயம் பெருகும்....

நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்ள வாய்ப்பு அதிகம் ஜனவரியில் இருந்து மே மாதம் வரை அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்...

சனிபகவான் கடந்த 2025 முடியும் வரை அஷ்டமத்தில் ஒரு மூன்று மாதம் பயணித்து இருப்பார்... அந்த காலகட்டத்தில் ஏற்ற இறக்கமான பலன்கள் உங்களுக்கு நடந்திருக்கும்.. ஆனால் இந்த வருடத்தில் சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார்... அப்படி என்றால் நியாயத்தை சொல்லுபவர் சனி பகவான்... எவ்வளவு அநியாயமாக பிரச்சனைகள் நடந்தாலும் கூட உங்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களை ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து அடுத்தவர்களுக்கு புரிய வைக்கப் போகிறார்... ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று பெற முடியும்... அப்படி கெட்டவைகளை இழந்து நல்லவைகளை பெற போகிறீர்கள்...

சனிபகவான் நல்ல தொழில் அமைப்பை உங்களுக்கு கொடுப்பார்... இரண்டு விதமான தொழில்களை கூட நீங்கள் பார்த்து அதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும்... அஷ்டமஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்... ராகு பகவான் என்பது யார்? இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் தான்.. youtube facebook whatsapp instagram போன்ற சமூக வலைதளங்கள் தான் ராகு பகவான்.... தொழிற்பத்தை பயன்படுத்தி நீங்கள் எந்த காரியங்கள் செய்தாலும் அவை 100% வெற்றியடையும்.... ராகு பகவான் அஷ்டமத்தில் அமர்ந்து பேச்சிலே பெரிதாக எதையும் காட்டாமல் செயலிலே காட்டி நீங்கள் சாதிப்பீர்கள்...

பேச்சை குறைத்து சாதனையில் உங்களுடைய கவனம் செல்லும்.... வரக்கூடிய காலம் உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்... பாக்கியஸ்தானத்தின் அதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு மே மாதம் முடியும் காலகட்டத்தில் பெயர்ச்சியாக வருகிறார்... கேட்டவைகளை கொடுப்பார் தொட்டது தொடங்கும் கேட்டது கிடைக்கும்....

செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு ஜனவரி மாதம் உச்சநிலையில் பயணிக்கப் போகிறார் கூட்டு வியாபாரம் தொழில் இவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்... நீண்ட நாட்களாக திருமண த்த காரியங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல டைம்.... கேது பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்... வருகின்ற பணம் எப்படி செலவாகிறது என்பது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்... காரணம் இந்த காலகட்டங்களில் நல்ல வருமானம் வந்தாலும் கூட அவை சேமிப்புக்கு செல்ல வேண்டுமே தவிர விரயத்திற்கு செல்லக்கூடாது.. இப்படியான அறிவை நீங்கள் பெற்று வருகின்ற பணத்தை சிறப்பாக சேமித்தால் எதிர்காலம் குறித்தான பயம் உங்களை விட்டு அகலும்..... நவகிரகங்களுக்கு முடிந்தவரை விளக்கு ஏற்றி வழிபடுங்கள் நன்மை நடக்கும்... வாழ்த்துக்கள் வணக்கம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.