ஆன்மீகம்

புத்தாண்டு ராசிபலன் 2026 - தொழிலில் உச்சமடையும் மிதுன ராசி!

நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணங்கள் வர வாய்ப்புண்டு....

மாலை முரசு செய்தி குழு

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பெரிய போராட்டமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும் கடந்த 2025... காரட் ராகு பத்தில் அமர்ந்தார் பிறகு ஒன்பதாம் வீட்டிற்கு சென்றார்... அதேபோல கேது பகவான் நான்கில் அமர்ந்தார் பிறகு மூன்றாம் வீட்டில் இருக்கிறார்... இப்படியாக கலவையான பலன்கள் கடந்த 2025இல் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்... சரி வருகின்ற 2026 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்...

புதன் வீட்டை ராசியாக கொண்ட அன்பர்களே மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் நினைக்க மாட்டீர்கள்... நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று எப்பொழுதும் இருப்பீர்கள்... அடுத்தவர்களை தாக்கவோ அல்லது குறை கூற உங்களுக்கு அவ்வளவாக வார்த்தைகள் வராது... அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நீங்கள்... உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார் பாக்கியஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார்... அப்படி என்றால் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணங்கள் வர வாய்ப்புண்டு... செய்யும் வேலைகளில் ராகு பகவான் உங்களுடனே இருப்பார்... அது எப்படி பகவான் நம்முடன் இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்? ராகு பகவான் என்பது வேறு யாரும் அல்ல தற்பொழுது நாம் கையில் வைத்திருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் தான்... இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தான் ராகு பகவான்... நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி வேலைக்கு சென்றாலும் சரி வியாபாரத்தை பார்த்தாலும் சரி தொழில் செய்தாலும் சரி கலை துறையாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி அனைத்திலும் ராகு பகவானின் தலையீடு இல்லாமல் இயங்கவே முடியாது.... அப்படிப்பட்ட ராகு பகவான் உங்களுடைய பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் அனைத்துமே உங்களுக்கு பாக்கியமாக கொடுக்கிறார்...

இந்த நல்ல சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. மிதுன ராசி அன்பர்களே இருக்கின்ற இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று தொழில் செய்யலாமா அல்லது ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யலாமா என்று மனதில் சிந்தனை இருந்தால் உடனே செயல்படுத்துங்கள் அவை வெற்றியும் அடையும்... குருபகவான் உங்கள் ராசிக்கு முதல் ஆறு மாத காலகட்டத்தில் ராசியிலேயே அமர்ந்திருக்கிறார்... அடுத்த ஆறு மாத காலம் தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய தனயோகத்தை கொண்டு வருகிறார்....

எப்படி மிதுன ராசியை பொறுத்தவரை ஏழாம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகத்திற்கு அதிபதி இரண்டாம் வீட்டில் உச்ச நிலையில் அமரும்போது வருமானம் பல மடங்காக உயரும்... திருப்திகரமான வருமானம் உங்களுக்கு இருக்கும்... எவ்வளவு சம்பாதித்தாலும் பாக்கெட்டில் ஒரு பத்து ஆயிரம் ரூபாய்.. உங்களால் நிறுத்த முடியவில்லை என்று பலர் கஷ்டப்பட்டு இருக்கலாம்... குருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியான அந்த நாள் முதல் உங்களுடைய சேமிப்பு வருமானம் உயரும்.... நீண்ட நாட்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த வருடத்தில் 2026 உங்களுக்கு திருமண யோகம் உள்ளது... முதல் ஆறு மாதம் ஏழாம் பாவகத்தை குரு பகவான் பார்த்துக் கொண்டே இருக்கிறார் உங்களுடைய வாழ்க்கை துணையை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்.... அடுத்த ஆறு மாத காலம் உங்களுடைய குடும்பஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருக்கிறார் அவர் ஏழாம் அதிபதி... அப்படி என்றால் ஏழாம் வீட்டோடு இந்த 2026 முழுவதுமாக குருபகவான் தொடர்பில் இருப்பதால் திருமணத்திற்காக காத்திருக்கும் அன்பர்களே இது உங்களுக்கு ஜாக்பாட் நேரம்..... 35 வயதை கடந்து திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு கூட தற்போது திருமண யோகம் கைகூடி வருகிறது....

குருபகவானின் கடக ராசி சஞ்சாரம் உங்களுடைய ஆறாம் வீட்டை பார்க்கிறது உங்களுடைய பத்தாம் வீட்டை பார்க்கிறார் எனவே... தொழில் ரீதியாக முடங்கிக் கிடந்த மிதுன ராசி அன்பர்களுக்கு கூட தொழில் வெற்றி... அதன் மூலம் பெருத்த லாபம் போன்றவை கிடைக்கும்.... கேது பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் அதாவது உங்களுடைய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.. அதற்காக மனம் தளர்ந்து விடாதீர்கள்... நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்பட்டால் நடக்கவில்லை என்று மனம் சோர்ந்து போகாதீர்கள்... குருபகவானின் உச்ச நிலை உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்... ஆஞ்சநேயர் வழிபாடு மிகச் சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும்... குறிப்பாக ஆஞ்சநேயருக்கு விளக்கு ஏற்றி விட்டோ அல்லது கற்பூரம் ஏற்றி விட்டோ அவரை வணங்கி ஒரு வேலையை தொடங்குங்கள் வெற்றியை பெறுவீர்கள்... சிவபெருமான் கோவிலுக்கு சென்றும் அவரை வழிபடுவதன் மூலம் சூரிய பகவானின் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய கேது பகவான் சாந்தி நிலைய அடைந்து உங்களுக்கு வழி வகைகளை செய்து கொடுப்பார்....

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஜனவரி கடந்து அஷ்டமஸ்தானத்தில் உச்சம் பெற போகிறார்.... விலகி இருந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள்.... விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்... வாழ்க்கை துணையின் குடும்பத்தாரிடத்தில் நல்ல மரியாதையும் பாசமும் அன்பும் அதிகப்படியாக கிடைக்கும்... வாழ்க்கை துணையின் மூலம் எதிர்பாராத தன வரவு உண்டு.... வாழ்க்கைத் துணையின் மூலம் இடம் நிலம் பொருள் சேர்க்கை உண்டு...

இப்படியாக 2026 இல் சனி பகவான் உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து வேலைகளில் கவனமாக இருக்கவும் நிதானமாக வேலைகளை கையாளமும் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.... பத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கும் பொழுது ட்ரான்ஸ்போர்ட் லாஜிஸ்டிக் இரும்பு தொடர்பான பொருட்கள், வழக்காடு மன்றம், எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வது, உணவு சம்பந்தமான பொருட்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பெரு வியாபாரிகளுக்கு இது ஒரு ஜாக்பாட் டைம்... குருபகவானின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் மே மாதத்திற்கு பிறகு குருவின் நேரடி பார்வையில் உச்சம் பெற்று பார்க்க போகிறார்... தொழில் ரீதியான முன்னேற்ற மட்டுமல்ல சொந்த தொழில் தொடங்கவும் 100 சதவீதம் வாய்ப்பு உண்டு அதன் மூலம் பெருத்த லாபம் கூட நீங்கள் எடுக்கலாம்... இஷ்ட தெய்வத்தை மனதார வடிவட்டு வாருங்கள் சிறப்பான எதிர்காலம் அமையும்..

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.