ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, சாளக்கிராம மாலை சூடி, கையில் தங்க செங்கோலுடன், தன்னுடைய பக்தர்களின் தீராத வினைகளை எல்லாம் தீர்க்கும் 'ஶ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் ஆலயம் , திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் .முசிறி வட்டத்தில் காவிரியின் வடகரையில் குணசீலம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது.
அகண்டு ஓடும் காவிரியின் வடகரையில் வைணவர்களின் புராண அபிமானத் தலமாக விளங்கும் இந்த கோவில் தென் திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.
திருப்பைஞ்லி எனும் வனத்தில் எழுந்தருளிய தால்பிய மகரிஷிக்கு சீடரான குணசீல மகரிஷி, திருமலை திருப்பதிக்கு சென்று அங்குள்ள திருவேங்கடமுடையானை தரிசித்தார். பின்னர் ஊர் திரும்பிய அவர். திருமாளை நினைத்து காவிரியில் நீராடி கடும் தவம் புரிந்தார் .
தவத்தின் பலனாக குணசீல மகரிஷியின் முன், அர்ச்சாவதாரமாகத் தோன்றிய பெருமாள். சங்கு, சக்கரம், சாட்டை தரித்தவராக, மோகினியும் கண்டு மோகிக்கும் மோகனனாக, திருமகளை மார்பில் தரித்தவராக திவ்விய சொரூபராக காட்சி அளித்தார்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்க,. கண்டேன் என் கடவுளை என்று திருமாலின் திருப்பாதங்களில் பணிந்து வீழ்ந்த குணசீலர், காட்சி கொடுத்த இடத்திலேயே இருந்து பெருமாளை அருள் பாலிக்க வேண்டுமென வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்ற பச்சை வண்ண மேனியின், காட்சி கொடுத்த இடத்திலேயே குடிகொண்டு மக்களுக்கு குறைதீர்த்து வருகிறார் வெங்கடாசலபதி.
குணசீல மகரிஷியின் பெயரிலேயே உருவான குணசீலம் எனும் இந்த ஆலயத்தில் பெருமாள் சகஸ்ரநாமம் மாலையும், சாளக்கிராம மாலையோடும் காட்சிதருவதோடு. மூலவரின் திருமுன்பில் உற்சவர் உபய நாச்சியார்களுடன் காட்சியளிக்கின்றார்.
உட் திருச்சுற்றில் மிகவும் அருமையான வண்ண ஓவியங்கள் காணப்படும் நிலையில், அஷ்டலக்ஷ்மிகளின் திருவுருவங்களும் செதுக்கப்பட்ட, கதவுகளோடு கூடிய 'கண்ணாடிப் பள்ளியறையும் அதன் அருகே நரசிம்ம மூர்த்தி தனது துணைவியாருடன் அமர்ந்துள்ள ஓவியமும் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது
ஒவ்வொரு உச்சிகால பூஜை, அா்த்தஜாம பூஜை வேளைகளில் பெறப்படும் பெருமாளின் திருவடிப் புனித தீா்த்தத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் முகத்திலும் ஆச்சார்யார்கள் தெளிக்கும் போது சகல மனநலக் குறைகள் நீங்கி நோயாளிகள் குணமாடைவதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஒரு யந்திரத்தில். மந்திரம் எழுதி, அதை பெருமாள் பாதத்தில் வைத்து, வணங்கிய பிறகு, அதைத் தாயத்தாக அணிந்து கொள்ளும் போது பக்தர்களுக்கு பில்லி சூன்யம், நரம்பு சம்பந்தமான பிணிகள், மற்றும் தீராத வியாதிகளும் வெங்கடாஜலபதி தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
திருப்பதிக்கு இணையான தலம் என்று போற்றப்படும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் சனிக்கிழமையில் பெருமாளை உச்சிகால பூஜையில் தரிசித்தால் மனதில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தந்தருளுவார்.
கோவிலின் அருகில் காவிரி நதியும் எதிர்ப்பக்கத்தில் பாபவிநாச அருவியும் அமைந்துள்ள நிலையில். கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருந்து பக்தர்களுக்கு மனோ தைரியத்தை வழங்கி வருகிறார்
கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், வாய்பேச முடியாத நிலையில் இந்த கோவிலுக்கு வந்து பேசும் சக்தியைப் பெற்றான் என்பதால், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் பேச்சு வன்மை பெற்று விடுவதாக கூறப்படுகிறது
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை 48 நாட்கள் கோயிலில் தங்க வைக்கும் சக்தி இந்த கோயிலுக்கு உண்டு.மூலவருக்கு செய்யப்படும் பிரார்த்தனைகள் நோயாளிகளை குணப்படுத்துகின்றன.
சிறிதான ஆலயம்தான் என்றாலும் சாந்நித்தியம் பெரிது என்பதால் எல்லைகளற்ற கருணையையும் அருளையும் பொழியும் பெருமாளை வணங்க உலகமெங்கிலிருந்தும் குனசீலத்திற்கு பக்தர்கள் வருகைதந்து வணங்குகின்றனர்.
குணசீலம் வெங்கடாசலபதியை கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்து. சகல ஐஸ்வர்யங்களுடன் திகழ இக்கோவிலுக்கு செல்வோம் பெருமாளின் அருளை பெறுவோம்.
மாலை முரசு செய்திகளுக்காக முசிறியிலிருந்து செய்தியாளர் சுரேஷுடன் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்