அன்பு நேயர்களே,ஆலயம் என்றாலே வெறும் ஆன்மீகம் நிறைந்த இடமட்டுமல்ல மனித அறிவுக்கு எட்டாத பல அதிசயங்களை தாங்கி நிற்கும் பகுதியாகவும் விளங்குகிறது.பிரமாண்டமாக எழுப்பட்ட ஆலயங்களின் உள்ளே பிரமிக்கதக்க நிகழ்வுகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிசயங்களைத்தேடி அலைய வேண்டிய அவசியமில்லை அவை ஒவ்வோரு ஆலயங்களுக்கும் உள்ளே புதைந்து கிடைக்கிறது
ஆலயங்கள் மூட நம்பிக்கையின் கூடாரங்கள் அல்ல,அது ஒரு அறிவு மேடை,ஆலயங்கள் பஞ்ச பூதங்களின் கலவையால் உருவக்கப்பட்ட கலைக்கூடம்.காந்த அலைகளால் சூழப்பட்ட ஆலயங்களில் நடக்கும் அதிசயங்களை இனி உங்கள் பார்வைக்கு படைக்கிறது உங்கள் மாலை முரசு தொலைகாட்சி
ஒவ்வொரு கோயில்களும் தனிச்சிறப்போடு விளங்கி பக்தர்களை பரவசப்படுத்துகிறது. அந்த பரவசங்களை உங்கள் விழிகளுக்கு முன்னே வழங்கவுள்ளோம்.
நிறம் மாறும் சிவலிங்கம்,எடை கூடும் கருடன்,தங்க நிறத்தில் ஒளிரும் நந்தி பகவான்,சிலையில் இருந்து வடியும் ரத்தம், விலங்குகள் பூஜை நடத்தும் விநோதம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் நடக்கும் அதிசயங்களை கண்டு ஆனந்த படுவோம் வாருங்கள்.
அழகான ஆலயத்துகுள்ளே அறிவியலுக்கு எட்டாத அதிசயங்கள் விஞ்ஞானிகளால் விளாக்க முடியாத விடைகள் ஆலயங்களுக்கு உள்ளே அழிவில்லாமல் நடக்கும் ஆற்றல்கள் தான் என்ன விஞ்ஞானம் வியந்து பார்க்கும் வினோத வழிபாடுகள் புவியீர்ப்பு விசைக்கு எதிர்விசையை கொண்ட கற்கள் பாறைக்குள்ளே பாதையை ஏற்படுத்திய மர்மம் உணர்வற்ற பாறைக்கு உயிரூட்டிய அதிசயம் நிலையான சிலை அழகாய் பறந்த காட்சி எங்கே இது இருக்கிறது எப்படி அது நடக்கிறது...
இடம் மாறினால் எடை மாறும் தெய்வ சிலையின் அதிசயத்தை காண்போம் வாருங்கள் நேயர்களே….இறைவன் சன்னதியில் நம் உடலும் உள்ளமும் எப்படி காற்றைபோல லேசாகி விடுகிறதோ ,அப்படி கரையாத கல்லும் காற்றைப்போல் ஆகும் அதிசயம் நிகழும் ஆலயம் தான் கும்பகோனத்தை அடுத்துள்ள பெண்ணுக்கு பெருமை தந்த, நாச்சியார் கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படும் நாச்சியார் கோவில் திருத்தலம் கோச் செங்கணான் என்ற சோழ மன்னனால் கட்டப்பட்ட பிரமாண்ட ஆலயம் ஆகும்.
கும்பகோனத்திலிருனது 8 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் 76 அடிகொண்ட ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாய் கட்சியளிக்கிறது. எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத வகையில் இங்கு கிழக்கு முகமாய் நின்றபடி மூலவர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் காட்சியளிக்க வலது பக்கத்தில் நம்பிக்கை நாச்சியார் காட்சி தருகிறார்.தெற்கு நோக்கி காணப்படும் பரமபத வாசல், சித்தர் வாழும் கற்தூண்,இன்னும் பல சிறப்புக்களை கொண்ட இத்திருத்தலத்தின் வியக்க வைக்கும் அதிசயம் தான் காற்றை சுவாசிக்கும் கல் கருடன்
காற்றை சுவாசிக்கும் கல் கருடன்
சிற்பக்கலையின் சிறப்பின் ஒன்றாக விளங்கும் மயுரசன்மன் வடித்த இந்த கல் கருடன் ,பட்சிராஜன் என்ற பெயரோடு ஐந்தடி உயரத்தில் ஒரே கல்லினால் வடிவமைக்கப்ப்பட்டு கருவறைக்கு சற்றுமுன்னால் தனி சன்னதியில் பிரமாண்டமாய் தோற்றமளிக்கிறார்.உடலில் ஒன்பது இடங்களில் நாக உருவம் கொண்டு காணப்பட்டும் இந்த கருடனுக்கு பூஜை செய்தால் நாகதோஷம் தீரும் என்பது நம்பிக்கை
அதிசயம் நிகழும் நேரம்
மார்கழி,பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவில் தான் அந்த அதிசயம் இங்கே அரங்கேறுகிறது. மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வான கல்கருடனின் மீது பெருமாள் அமர்ந்து வீதியுலா காணும் வைபவம் மிகவும் புகழ்வாய்ந்தது.
அந்நாளில் இந்த கோயிலில் குவிந்துருக்கும் ஆன்மிக பக்தர்களின் கண்கள் கருவறையை நோக்கி குவிந்திருக்கும்…..அப்போது தான் அந்த அதிசயம் நிகழத்தொடங்குகிறது…..
அந்த சமயத்தில் கருவறையில் இருந்து பட்டு வஸ்திரம் அணிந்து சர்வ ஆபரணங்களோடு மலர்களால் அலங்கரிக்கபட்ட கருடன் புறப்படுவார். இதில் ஒரு சிறப்பம்சமும் உண்டு.
கருவறையில் இருந்து புறப்படும்போது 4 பேர் அவரை பல்லக்கில் தூக்குவர். அந்த அளவுக்கே மூலவரின் எடை இருக்கும். மண்டபத்திற்கு வெளியே வரும்போது உற்சவரான கல்கருடனின் சுமை கூடும்.
இதனால் கருடனை தூக்குவோரின் எண்ணிக்கை நான்கில் இருந்து எட்டாக உயரும். சுமை கூடகூட, 16, 32, 64, 128 பேர் என்ற கணக்கில் அதை தூக்குவோரின் எண்ணிக்கையும் உயரும்.
பின்பு ஸ்ரீநிவாச பெருமாள் கருடாழ்வாரின் மீது அமர்ந்து வீதியுலா வருவார். வீதியுலா முடிந்து கோயிலை நெருங்கும்போது, 128 பேர் சுமக்கும் கல்கருடனின் எடை மீண்டும் குறையத் தொடங்கும்,
அதைத் தொடர்ந்து 64 பேர், 32 பேர், 16 பேர், 8 பேர், 4 பேர் என படிப்படியாக சுமந்து செல்லும் வகையில் அதன் சுமை குறையும். இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..
இத்திருககருடன் சன்னதியை விட்டு வெளியேறும் போது மனிதர்களை போல் வியர்வை வழிய தொடங்கிறதாம்
இந்த அதிசய நிகழ்வை சுற்றி பல காரணங்களும் ,சரித்திர நிகழ்வுகளும் சொல்லபடுகின்றன. சிற்பி மயுரனால், சுவாசிக்கும் பறைகளில் இந்த கருடன் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரு சிற்பி ஆகம விதிகளுடன் இந்த கருடனை உருவாக்கி அதன் இரு பாகங்களிலும் சிறகுகளை செதுக்கி பிராண பிரதிஷ்டை செய்தபோது அது உயிர் பெற்று பறந்ததாம்.அச்சமடைந்த சிற்பி கல் உளியை எறிந்து போது கருடனின் மூக்கில் அடிபட்டு பின்னர் இறங்கி வந்து கலியுக வரதராய் இந்த கோயிலில் அருள் பாலிப்பதாக சொல்லப்படுகிறது.
புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து நிறுவப்பட்ட . சுமார் மூன்று டன் எடைக்கு மேலே உள்ள கருட பகவானின் எடை எப்படி படிப்படியாக அதிகரித்து படிப்படியாக குறைவதும் புரியாத புதிராக தோன்றுகிறது. ஆராய்சியாளர்களால் அளவிட முடியாத,இந்த அதிசயம், இன்னும் பல விடை தெரியாத வினாக்களோடு வீற்றிருக்கிறது.