AI Image
ஆன்மீகம்

கழுகுகளுக்கு முக்தி அளித்த ஈசன்- திருக்கழுக்குன்றத்தின் அற்புதப் பின்னணி

இறைவனின் அபிஷேகத்திற்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது.

மாலை முரசு செய்தி குழு

12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை நாம் அறிந்திருப்போம் ஆனால் தெய்வீகத்தால் 12 வருடத்திற்கு ஒருமுறை தோன்றும் அதிசய சங்கினை பற்றியும் அது தோன்றும் சிறப்புமிக்க கோவில் குறித்து அறிந்துகொள்வோம்

108 அதிசய மூலிகைகள் நிறைந்த இடம், மூன்று யுகங்களாக உணவருந்த வரும் கழுகுகள், 12 வருடத்திற்கு ஒருமுறை குளத்து நீரில் தோன்றும் வவம்புரி சங்கு.... இப்படி எண்ணற்ற அதிசயங்கள் நடந்து வரும் பாடல் பெற்ற சிவத்தலம் தான் தமிழகத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் வேதங்கள் அனைத்தும் உயர்தோங்கிய மலை வடிவில் தவம் செய்து வருகின்றன. அதன் உச்சியில் வாழை பூங்குருத்து போல சுயம்புலிங்கம் காட்சி தருகிறது.

மலைகளும்,வனங்களும் தீர்த்தங்களும் சூழ்ந்து இந்த திருகோவில், மலை மீது ஒன்றும் அடிவாரத்தில் ஒன்றுமாக இரண்டு அடுக்குகளாய் காட்சியளிக்கிறது.

மலைக்கோயிலின் உள்ளே கரும்பாறைகளால் சூழ்ந்திருக்கும் மூலவர், வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் காட்சியளிக்கின்றனர்

அடிவாரத்தில் அமைந்துள்ள தாழக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத பக்தவச்சலேஸ்வராக உலகையாலும் சிவன் அருள் வழங்கி வருகிறார்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வண வேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று இக்கோவில் தலபுராணம் புகழ்ந்துரைக்கிறது

முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் அடுத்தடுத்து முறையே இக்கோவிலில் உள்ள இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இத் திருத்தலம் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் பெற்றது.

புராண கால தொடர்ச்சியாக பல ஆண்டுகள் திருக்கழுக்குன்றத்தில், இரண்டு கழுகுகள் கோவிலுக்கு வந்து குருக்கள் கையில் வைத்துல்ள சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு விட்டு, கிண்ணத்தில் இருந்த நெய்யில் அலகை அலசி வீட்டு பறந்து விடுவாதாக கூறப்படுகிறது

கடந்த, 1681 ஆண்டு ஜனவரி 3ம் தேதி கழுகுகள் வந்து போனதை, ஹவட் என்ற டச்சுக்காரர் நேரில் பார்த்து பதிவு செய்துள்ள நிலையில். காலத்தின் மாற்றத்தால் கழுகுகள் முக்தி அடைந்ததால் 1994ம் ஆண்டில் இருந்து கழுகுகள் அங்கு வருவதில்லையாம்

இக்கோவிலில் நடைபெற்ற இன்னோரு அதிசய நிகழ்வாக, என்றும் 16 என்று சிவனருள் பெற்ற மார்க்கண்டேயர், கோவில் குளத்து நீரை எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து மனம் உருகி வேண்டினார்.

அப்போதுதான் சிவன் அருளால் அந்த அதிசயம் நிகழத் தோன்றியது...! நன்னீர் குளத்தில் ஒரு வலம்புரி சங்கு உருவாகி வெளிவந்ததையடுத்து அந்த சங்கை கொண்டு மார்க்கண்டையார் சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.

இறைவனின் அபிஷேகத்திற்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று பெயர் உண்டானது.

இந்த தீர்த்த குளத்தில் சங்கு தோன்றும் நிகழ்வு இக்காலம் வரை இக்கோவிலில் நடைபெற்று வருவது அதிசயத்தில் ஒன்றாகும்.

கடலில் மட்டுமே தோன்றும் வலம்புரி சங்கு இந்த நன்னிர் சங்கு தீர்த்தத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும்போது அதன் அறிகுறியாக குளத்தில் நுரை வருவதோடு மறுநாள் ஓங்கார சப்தம் கேட்குமாம். பின்னர் அந்தக் குளத்தில் மிதக்கும் சங்கினை கோவில் குருக்கள் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்த மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். அதன் பிறகு . பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, புதிய வலம்புரி சங்கினால் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்

இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுவதோடு

இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்து ஈசனை இந்திரன் இன்றும் பூஜிப்பதன் அடையாளமாக, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறைக் கோபுரத் துவாரம் வழியே இடி இறங்கி சிவலிங்கத்தை வலம் வருகிறது. 10.11.1930 அன்று நிகழ்ந்ததை அறிவியலாளர்களும் உறுதிப்படுத்தியுள்ள இவ்விந்தையில், மறுநாள் கருவறையில் அதீத வெப்பம் உணரப்பட்டாலும் ஆலயத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படுவதில்லை.".

வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கர மேளா மற்றும் கும்பமேளாவை போல இக் கோவிலில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் காட்சியளிக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.