ஆன்மீகம்

மகாபாரதப் போரில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஒவ்வொரு நாளும் ராத்திரி கிருஷ்ணர் நிலக்கடலை சாப்பிடுவாராம்...

மாலை முரசு செய்தி குழு

மகாபாரதம் அப்படின்னாலே நமக்கு முதல்ல ஞாபகத்துக்கு வர்றது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த அந்தப் பெரிய போர் தான். நன்மையை நிலைநாட்ட நடந்த இந்தப் போர்ல எவ்வளவோ வீரர்கள் சாகசம் பண்ணியிருக்காங்க. ஆனா, நாம கேள்விப்பட்ட கதைகளைத் தாண்டி மகாபாரதத்துல பலருக்கும் தெரியாத பல மர்மங்கள் ஒளிஞ்சு கிடக்குது. குறிப்பா அந்தப் போர் நடந்த 18 நாட்கள்ல நடந்த பல விஷயங்கள் இன்னைக்கும் பல பேருக்கு ஒரு பெரிய புதிராவே இருக்கு. உதாரணத்துக்கு, மகாபாரதப் போர்ல கிட்டத்தட்ட 40 லட்சம் வீரர்கள் கலந்துகிட்டதா சொல்லப்படுது. அவ்வளவு பேருக்கு சாப்பாடு எப்படி ரெடி பண்ணாங்க? யாரு சமைச்சாங்க? அப்படிங்கிறது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம்.

இந்தக் கதையில உடுப்பி நாட்டு மன்னர் ஒருத்தர் இருந்தாரு. அவரு யாரு பக்கமும் சேராம, போர்ல இருக்குற அத்தனை வீரர்களுக்கும் சாப்பாடு போடுற பொறுப்பை ஏத்துக்கிட்டாரு. ஆனா இங்கதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்கள் போர்ல இறந்துட்டே இருப்பாங்க. அப்படி இருக்கும்போது கரெக்டா எத்தனை பேருக்கு சாப்பாடு சமைக்கணும்னு அவருக்கு எப்படி தெரிஞ்சது? ஏன்னா சாப்பாடு ஒரு பருக்கை கூட மிஞ்சவும் இல்லையாம், பத்தாம போகவும் இல்லையாம். இதோட ரகசியம் என்னன்னா, ஒவ்வொரு நாளும் ராத்திரி கிருஷ்ணர் நிலக்கடலை சாப்பிடுவாராம். அவரு எத்தனை கடலை சாப்பிடுறாரோ, அத்தனை ஆயிரம் வீரர்கள் அடுத்த நாள் போர்ல இறந்துடுவாங்கன்னு அர்த்தம். இதை வச்சு தான் உடுப்பி மன்னர் சாப்பாட்டைச் சரியா கணக்கு பண்ணி சமைச்சாராம்.

அதே மாதிரி மகாபாரதத்துல கர்ணனைப் பத்தி நமக்கு நல்லாவே தெரியும். ஆனா கர்ணனோட கவசம், குண்டலத்தை இந்திரன் தானமா கேட்டப்போ, அதுல இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அவர் கழட்டிக் கொடுத்தது நமக்குத் தெரியும். ஆனா கர்ணன் தன் வாழ்நாள்ல செஞ்ச அத்தனை புண்ணியங்களையும் கூட ஒரு கட்டத்துல தானமா கொடுத்தாராம். போர்க்களத்துல கர்ணன் அடிபட்டு சாவுற நிலைமையில இருக்கும்போது, கிருஷ்ணர் ஒரு அந்தணர் வேஷத்துல போய் அவர்கிட்ட தானம் கேட்டாராம். அப்போ அவர்கிட்ட கொடுக்க எதுவுமே இல்லை, ஆனா தன்னோட பல்லுல தங்கம் இருக்குன்னு தெரிஞ்சு, ஒரு கல்லை எடுத்துத் தன்னோட பல்லையே உடைச்சு ரத்தத்தோட அந்தத் தங்கத்தைக் கொடுத்தாராம். இதைப் பார்த்து கிருஷ்ணரே நெகிழ்ந்து போயிட்டாராம்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, கௌரவர்கள் 100 பேருன்னு நமக்குத் தெரியும், ஆனா அவங்களுக்கு ஒரு சகோதரியும் இருந்தாங்க. அவங்க பேரு துச்சலை. அவங்களோட வாழ்க்கை ரொம்ப சோகமானது. மகாபாரதப் போர்ல அவளோட அத்தனை அண்ணன்களும் இறந்துட்டாங்க, கடைசியில அவளோட கணவனான ஜெயத்ரதனும் அர்ஜுனனால கொல்லப்பட்டான். இதையெல்லாம் தாண்டி அந்தப் போர்ல தப்பிச்ச ஒரே கௌரவர் விகர்ணன் தான். ஏன்னா திரௌபதிக்கு அவமானம் நடந்தப்போ, அண்ணன்களுக்கு எதிரா குரல் கொடுத்த ஒரே ஆள் இவருதான். இந்த மாதிரி மகாபாரதத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு பின்னாலயும் ஒரு பெரிய ரகசியமும், வாழ்வியல் பாடமும் இருக்கு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.