கிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி என்று கூறுகிறார் மலர்களிலே நான் மல்லிகை என்று தனக்கு பிடித்த மலரை பற்றி சொல்கிறார்… இப்படியாக கிருஷ்ணருக்கே பிடித்த மாதமான மார்கழியின் இறுதியை நாம் எட்டி விட்டோம் இந்த மாதத்தின் இறுதியில் நாம் செய்ய வேண்டியது என்ன? தை மாதத்தை நெருங்குவதற்கு முன்பாக மார்கழியில் தெய்வங்களை குளிர்விக்கும் வகையில் காலையில் எழுந்து வீட்டிற்கு முன்பாக மனதிற்குப் பிடித்த கோலங்களை தெய்வத்திற்கு இட்டு நாம் மகிழலாம். அதேபோல் மார்கழிக்கு பிறகு வரும் தை மாதத்தில் உழவுக்கும் உழவருக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் விவசாயிகளும் நாமும் பொங்கலிட்டு மகிழ்வோம்… இந்த பண்டிகைக்கு முன்பாகவே தெய்வங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்…
ஒரு கை தொடங்கி மறுத்தை வரும் மட்டும் உணவுக்கான அத்தனை காரியங்களையும் தெய்வம் நம்முடனே நின்று நம்மை ஆசீர்வதித்து நமக்கு தேவையானவற்றை வழங்கி இருக்கிறது… இந்த காலங்களில் தாய் அன்னபூரணியை வணங்கி அவருக்கான படையலை இட்டு வெள்ளிக்கிழமை என்று மனதார வழிபட்டால் வருகின்ற தை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அடுத்த மார்கழி மாதம் இறுதி வரை நமக்கு எந்த கஷ்டங்களும் இல்லாமல் இறைவன் நம்மை காப்பார் என்பது ஐதீகம்…
முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை இந்த மார்கழி இறுதியில் நாம் செய்ய வேண்டும் குறிப்பாக பித்ரு தோஷம் நீங்க குடும்ப நலம் பெறுக முன்னோர்களை வழிபடுவது மிக மிக சிறப்பானது… அதேபோல் மார்கழியில் பெருமாள் கோவிலில் சேவை திருப்பாவை பாராயணம் போன்றவை நடைபெறும் சமயங்களில் நாம் கலந்து கொண்டு பெருமாளின் அனுக்கிரகத்தை நாம் பெறுவோம்… வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செல்வத்தையும் மன அமைதியையும் பெற்று தரும்… குறிப்பாக மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி துளசி முன் அல்லது பூஜை அறையில் பிரார்த்தனை செய்வதன் மூலமாக இல்லத்தில் அமைதியும் சாந்தியும் நிலவும்..
மற்றவர்களுக்கு நாம் தானமும் தர்மமும் செய்யலாம் அதில் அரிசி வெள்ளம் நெய் போன்றவற்றவுடன் உடை போன்றவற்றையும் தானம் செய்யலாம் இதனால் புண்ணியம் பல மடங்கு நமக்கு பெருகும்… மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் நாம் பகவத் கீதை விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவை பாராயணம் செய்வதன் மூலமாக நமக்கு மிக விசேஷ பலன்கள் கிடைக்கும் வீட்டில் செல்வம் சேர்வதோடு அல்லாமல் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த சுப காரியங்கள் நடந்தேறும்… ஏகாதிசி அல்லது அம்மாவாசை அன்று விரதம் இருந்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன்களை நாம் பெறலாம்…
அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை செய்வது , வீண் பேச்சை தவிர்த்து மனதை ஆக்கப்பூர்வமான காரியங்களில் செயல்படுத்துவது போன்றவை மார்கழி மாதத்தில் செய்யும் பொழுது அந்த வருடம் முழுவதுமாக நாம் என்ன பெறுகிறோம் என்பதை உணர்ந்து இந்த பிரபஞ்சம் நமக்கு கொண்டு வந்து கொடுக்கும்…
அதிகாலை நான்கரை மணியிலிருந்து ஆறரை மணி வரை பிரம்ம முகூர்த்த சிறப்பு நேரம் ஆகையால் குளித்து சுத்தமான உடை அணிந்து வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரித்து விளக்கை ஏற்ற வேண்டும் குறிப்பாக நெய் தீபம் அல்லது எள் எண்ணெய் தீபம் இரண்டு ஏற்ற வேண்டும். ஒன்று முன்னோர்களுக்காகவும் மற்றொன்று உங்களுக்காகவும். மார்கழி இறுதியில் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம் குறிப்பாக ஐந்து நிமிடம் கண்களை மூடி குடும்ப நலம் உடல்நலம் மன அமைதி வேண்டி பிரார்த்தனை செய்யும் போது பிரபஞ்சம் மற்றும் இறைவன் நாம் கேட்டவற்றை நமக்கு கொண்டு வந்து கொடுப்பார்.
ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை நாம் 108 முறை பாராயணம் செய்து சிவபெருமானின் அனுக்கிரகத்தை நாம் வேண்டி வணங்கினால் ஈசனின் அருளை நாம் பெற முடியும். இதனால் உடலில் ஏற்பட்ட நோய் பிரச்சனை தீர்க்க முடியாத கடன்கள் போன்றவற்றிலிருந்து நம்மை சிவபெருமான் காப்பாற்றி எதிரிகளின் தொல்லையையும் அழித்து கொடுப்பார்.
ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யும்பொழுது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அனுக்கிரகத்தை நம்மால் இயற்கையாக பெற முடியும் அவருடைய அருளை பெறுவதன் மூலமாக வீட்டில் தடை பட்ட சுபகாரியங்களோடு உடல் பிரச்சனை மனப்பிரச்சனை போன்றவற்றில் இருந்தும் நிம்மதியான நிரந்தர தீர்வை காண முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.