முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா.. திருச்செந்தூரில் கோலாகலம் நடந்த குடமுழுக்கு, முருகனின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூரில் இன்று குடமுழுக்கு பெருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று அதிகாலை குடமுழுக்கு நடைபெற்றது
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திருச்செந்தூர் கடற்கரை மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட நிலையில் காலை 6 மணிக்கு மேல் ராஜ கோபுரத்தில் உள்ள கும்பங்களுக்கு தமிழ் வேதங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டு அங்கு கூடியிருந்த மக்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கை முன்னிட்டு தயார் செய்யப்பட்ட 76 ஓம குண்டங்கள் நிறைந்த யாகசாலை தங்க நிறத்தில் ஜொலித்தது மேலும் இதில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி இன்று அதிகாலை 12- ஆம் கால யாகசாலை பூஜை நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து கலச பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 9 மணியளவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.
இதற்காக பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்த கோவில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தித்துருக்கு சிறப்பு பேருந்து இயக்கி பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை குறைத்துள்ளது. மேலும் திருச்செந்தூர் கடற்கரையில் வேலிகளை அமைத்து பக்கதர்களை நெறிப்படுத்தி கூட்ட நெரிசலை குறைத்து அசம்பாவிதங்களை தடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.