பெண்களுக்கான 15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஜூலை 1 முதல் 17 வரை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது..
இதில் "பி" பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் சீனா அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 3ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.