விளையாட்டு

ஷேன் வார்னே அறைக்குள் சென்ற 4 பெண்கள்.. மரணத்திற்கு முந்தைய சிசிடிவி காட்சிகள்!! என்ன நடந்தது?

ஷேன் வார்னே மரணத்திற்கு முன்பு அவரது அறைக்குள் 4 பெண்கள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Suaif Arsath

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான ஷேன் வார்னே கடந்த மார்ச் 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன.

ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா போல் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த விடுதியில் தான் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஷேன் வார்னே இறப்பிற்கு முன்பு 4 பெண்களை வர சொன்னது தெரியவந்தது. மார்ச் 4ஆம் சுமார் 1.30 மணி அளவில் வெளியே சென்று விட்டு அறைக்கு திரும்பிய ஷேன் வார்னே, 4 மசாஜ் பெண்களை வரச்சொல்லியுள்ளார். அதில் 2 பேரை தனக்கும், 2 பேரை நண்பர்களுக்கும் மாசாஜ் செய்யும் படி கூறியுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்கள் சும்மர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு.. அதாவது 2.58 மணி அளவில் அந்த பெண்கள் வார்னே அறையில் இருந்து வெளியே சென்றனர்.. இதற்கான முழு சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

என்னதான் மசாஜ் பெண்கள், ரூமில் ரத்தகறைகள் என பல சந்தேகங்கள் எழுந்தாலும், ஷேன் வார்னே இயற்கை முறையில்  தான் மரணம் அடைந்தார் என அடாப்சி ரிப்போர்ட் கூறுகிறது..மேலும் இந்த வழக்கை முடித்து, வார்னின் உடல் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.