விளையாட்டு

நெதர்லாந்து ஜோடிகளை வீழ்த்திய இந்திய தம்பதியினர்... உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா அசத்தல்...

உலக கோப்பை வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV
பிரான்ஸில் நடைபெற்ற பெண்களுக்கான உலக கோப்பை ‘வில்வித்தை குழுப்போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. பாரீசில் பெண்களுக்கான வில்வித்தை குழுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியா - மெக்ஸிக்கோ அணிகள் மோதின. இந்தியா சார்பில் அபாரமாக ஆடிய தீபிகா குமாரி, கோமாலிகா பாரி மற்றும் அங்கிதா பாகத் ஆகியோர் ஐந்துக்கு-ஒன்று என்ற புள்ளி கணக்கில் மெக்ஸிக்கோவை தோற்கடித்து, தங்கத்தை வென்று அசத்தினர்.
இதேபோல், உலக கோப்பை வில்வித்தை போட்டியில்  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கணவன்-மனைவியான அதுனா தாஸ், தீபிகா குமாரி தம்பதியினர் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். நெதர்லாந்து ஜோடிகளான கெப்ரிலா, வான் டேனை எதிர்கொண்ட இந்திய தம்பதியினர் ஐந்திற்கு-மூன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.