38 பந்துகளில் 113 ரன்கள்.. 'அபிஷேக்' அபாரம்! சூர்யவன்ஷி அதிரடி...13.2 ஓவரில் ஆட்டத்தை முடித்த இந்தியா அணி..! PTI
விளையாட்டு

38 பந்துகளில் 113 ரன்கள்.. 'அபிஷேக்' அபாரம்! சூர்யவன்ஷி அதிரடி...13.2 ஓவரில் ஆட்டத்தை முடித்த இந்தியா அணி..!

ஜேக்கப் டஃபி, ஆடம் மில்னே, மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன் என நான்கு பந்துவீச்சாளர்களை முதல் 4 ஓவர்களில் பயன்படுத்தியது நியூசிலாந்து. 15 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார் அபிஷேக் சர்மா.

Antony Ajay R

இந்தியா - நியூசிலாந்து இடையே 3-வது டி20 போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணி, 198 ரன்களை விட்டுக்கொடுத்தது.

நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல், 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் அடித்தார். இதையடுத்து, 199 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய இந்திய பேட்டர்கள் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி, இந்த இலக்கை மிக எளிதாக எதிர்கொண்டனர். ஆட்டத்தின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி அதிரடி காட்டினார் வைபவ்.

இருவரும் மாறி மாறி சிக்ஸர் விளாச முதல் ஓவரிலேயே 26 ரன்கள் வந்தது. ஜேக்கப் டஃபி, ஆடம் மில்னே, மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன் என நான்கு பந்துவீச்சாளர்களை முதல் 4 ஓவர்களில் பயன்படுத்தியது நியூசிலாந்து. 15 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார் அபிஷேக் சர்மா.

5 ஓவரில் 100 ரன்கள் அடித்து பாதி இலக்கை எட்டிவிட்டது இந்தியா.

IND vs NZ

எட்டாவது ஓவர் முதல் பந்தில் 231 ரன் ரேட்டுடன் 19 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த சூர்யவன்ஷி விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா, 35 பந்துகளில் சதம் விளாசினார். 9.6 ஓவரில் அவர் விக்கெட் இழக்கும்போது 11 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்திருந்தார்.

IND vs NZ

அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் இணை நிதானமாக விளையாடியது. இருவரும் அடுத்தடுத்து விக்கெட் இழக்க, நமன் திர் ஆடத்தை முடித்துக்கொடுத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்