விளையாட்டு

ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி...!  இந்தியா 14 பதக்கங்கள் வென்று அசத்தல்...!!

Malaimurasu Seithigal TV

ஆசியக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 14 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. 

கசகிஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா நகரில் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், நேற்று நடந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அனிரூத் குமார் வென்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் இதுவரை இந்தியா 14 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 10 வெங்கல பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். இதில் அமன் ஷெராவத் 57 கிலோ ஆடவர் பிரிவில் தங்கம் வென்றார். மேலும் ரூபின், அன்டிம் பங்கல் மற்றும் நிஷா தகியா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.