விளையாட்டு

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்...

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியினர், அணி தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Malaimurasu Seithigal TV

 2021 ஆம் ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக் கொண்ட நிலையில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதையொட்டி, அணி தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் வீரர், வீராங்கனைகள்  தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, வீரர், வீராங்கனைகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இந்த நிகழ்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.