விளையாட்டு

துருக்கி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரு தங்க பதக்கம் வென்ற எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு

துருக்கியில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு தங்க பதக்கங்கள் வென்று எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவி சாதனை படைத்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

துருக்கியில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு தங்க பதக்கங்கள் வென்று எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவி சாதனை படைத்துள்ளார்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் அண்மையில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக  மாணவி அபிராமி, ஜூனியர் கிளாஸிக், பவர்லிப்டிங் மற்றும் பெஞ்ச்பிரஸ் பிரிவில் இரு தங்கப்பதங்களை வென்றுள்ளார்.

இந்தநிலையில், கல்லூரி திரும்பிய அவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாணவி  தங்க பதக்கங்களை வென்று நாட்டிற்கும், பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரபபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.