விளையாட்டு

திரும்ப வந்துட்டாரு நம்ம "யார்க்கர் கிங்".. பயிற்சியில் உடைந்து பறந்த ஸ்டம்ப்.. இனிமேல் பறந்துகிட்டே இருக்கும் போல?

ஸ்டம்ப் உடைத்து பறக்கும் அளவுக்கு அதிவேகமாக பந்து வீசிய டி.நடராஜனின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Suaif Arsath

ஸ்டம்ப் உடைந்து பறக்கும் அளவிற்கு அதிவேகத்தில் பந்து வீசிய டி.நடராஜன் வீடியோ இணையத்தில் செம வைரலாக வருகிறது. அதிலும் அவரது ரசிகர்கள் "எங்கள் யார்க்கர் கிங் " திரும்ப வந்துட்டாரு என டி.நடராஜன் பார்த்து வியந்து வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 26ஆம் தேதி மும்பையில் ஆரவாரமாக நடைபெறவுள்ளது. இம்முறை 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு புதிய முறையில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் கடந்த ஆண்டு ஃபிட்னஸ் பிரச்சனையால் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.. இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி கம்பேக் கொடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் தான் யார்க்கர் கிங் டி.நடராஜன்.

இந்திய அணியில் அசத்தி வந்த நடராஜன், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு எந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் நடராஜன் எப்போது கம்பேக் கொடுப்பார் என ஆவலோடு காத்திருந்தனர். ரசிகர்களில் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஐதராபாத் அணி நடராஜன் மீது அதிக நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் அணியின் நம்பிக்கையை தூக்கி நிறுத்தும் வகையில், டி.நடராஜன் பவுலிங் பயிற்சி செய்யும் விடியோவை ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது. அதில் வெறிகொண்டு பந்துவீசும் நடராஜன், ஸ்டம்பை இரண்டாக உடைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் ஒரு தரமான சம்பவம் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.