dc vs lsg Admin
விளையாட்டு

"சிக்சர் மழையால் திரும்பி வந்த டெல்லி! லக்னோவின் அதிரடி ஸ்கோரை முறியடித்து அபார வெற்றி!"

அஷூதோஷ் சர்மாவின் கடைசி கட்ட அதிரடியால், லக்னோ அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி 'த்ரில்' வெற்றி பெற்றது.

Anbarasan

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், டெல்லி, லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். மார்க்ரம், கேப்டன் பந்த் ஏமாற்றிய போதும், மிட்சல் மார்ஷ் 72, பூரன் 75 ரன்கள் விளாசினர். இவர்களுக்கு பின் வந்த மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய போதும், டேவிட் மில்லர், கடைசி கட்டத்தில் அதிரடியாக சிக்சர்கள் விளாசி, அணி 200 ரன்களை கடக்க உதவினார்.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

20 ஓவரில், லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில், ஸ்டார்க் 3, குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு, மெக்கர்க் 1, அபிஷேக் படேல் (0), ரிஸ்வி (4) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினர். டு பிளஸி, அக்ஷர் படேல், சற்று நம்பிக்கை அளித்தனர். கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த அஷூதோஷ் சர்மாவும், விப்ராஜ் நிகாமும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க: CSK-வுக்கு மரண பயம் காட்டிய "ஆட்டோ டிரைவரின் மகன்".. மும்பை அணிக்கு கிடைச்ச "ஜாக்பாட்"! எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்களோ!

லக்னோ தரப்பில், ஷர்துல் தாக்கூர், சித்தார்த், திக்வேஷ், பிஷ்னோய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 66 ரன்கள் விளாசிய அஷூதோஷ் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்