விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்த... 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி...

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்த இங்கிலாந்து அணி, தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Tamil Selvi Selvakumar

நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனி நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 134 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 35 ரன்கள் எடுத்தார்.

இதனைத்தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.