விளையாட்டு

தோல்வியுற்ற இந்தியா.... ராஜினாமா செய்த பயிற்சியாளர்.....

Malaimurasu Seithigal TV

உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் கடந்த 13 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி கண்டு, கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.  இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.  
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டி தோல்வி எதிரொலியாக இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

-நப்பசலையார்