விளையாட்டு

"இதெல்லாம் ரொம்ப தப்பு தெரியுமா"!.. ஒரு வெற்றியும் பெறாத பாகிஸ்தான் கேப்டனின் பகீர் குற்றச்சாட்டு... யாரு மேல தெரியுமா?

நாங்கள் ஒரு முழுப் போட்டியில் விளையாடிய அடுத்த நாளே மீண்டும் ஒரு போட்டி வருகிறது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வேறொரு ஆட்டம்..

மாலை முரசு செய்தி குழு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்தத் தொடரில் பங்குகொண்ட பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா மனம் நொந்து பேசியுள்ளார். இந்த உலக கோப்பை பாகிஸ்தான் அணிக்கு மிகவும் ஏமாற்றமான பயணமாகவே முடிந்தது. ஏனெனில், அவர்கள் ஆடிய ஒரு போட்டியில் கூட வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல், பரிதாபமான முறையில் தொடரை விட்டு வெளியேறினர். (சரி, நாலு வருஷம் காத்துட்டு இருந்தும் ஒரு வெற்றி கூடக் கிடைக்கலைன்னா அவங்க கோபப்படத்தானே செய்வாங்க!)

போட்டிகளில் கிடைத்த படுதோல்விகளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய ஃபாத்திமா, தங்களின் இந்த மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் ஐசிசி-யின் போட்டி அட்டவணைதான் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். "நாங்கள் ஒரு உலக கோப்பைக்காக நான்கு நீண்ட ஆண்டுகள் காத்திருக்கிறோம். இந்தப் போட்டிகளில் நாங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் தோற்றதை மனதார ஒப்புக் கொள்கிறோம். ஆனால், எங்களின் போட்டி அட்டவணை மிகவும் கொடுமையாக இருந்தது" என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் ஒரு முழுப் போட்டியில் விளையாடிய அடுத்த நாளே மீண்டும் ஒரு போட்டி வருகிறது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வேறொரு ஆட்டம். இதனால், வீரர்களுக்குச் சோர்விலிருந்து மீண்டு வரவோ, அல்லது பயிற்சி செய்யவோ போதிய நேரம் கிடைக்கவே இல்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டித் தொடரில், சரியான இடைவெளிகள் மற்றும் ஓய்வு நாட்களைப் பெற்றிருந்த மற்ற முன்னணி நாடுகளுடன், தங்களால் எப்படிச் சமமாகப் போட்டியிட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கு இருக்கும் சவால்களை ஐசிசி சரியாகப் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான நியாயமான போட்டிச் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் குறுகிய கால அட்டவணையானது, ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் தங்களது சவாலை மேலும் கடினமாக்கிவிட்டதாகத் தலைவி ஃபாத்திமா சனா தனது மனக் குமுறலைத் வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த உலக கோப்பையிலாவது, ஐசிச போட்டித் திட்டத்தை வகுக்கும்போது, சிறிய கிரிக்கெட் நாடுகளின் தேவைகளுக்கும், அவர்களுக்குச் சாதகமான ஓய்வு நேரங்களுக்கும் செவிசாய்க்கும் என்றும், இதன் மூலம் எல்லோருக்கும் சமமான ஆடுகளத்தை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.