விளையாட்டு

கோப்பையை வெல்வது யார்.? இன்று இறுதிப் போட்டி.! 

Malaimurasu Seithigal TV

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. 

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த முன்னணி வீரர்கள் இன்றி, 2வது போட்டியில் களம்கண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும். எனவே, இந்திய அணி கைவசம் உள்ள வீரர்களைக் கொண்ட கோப்பையை வெல்லும் முனைப்பிலும், கடந்த போட்டியில் வெற்றிபெற்ற முனைப்புடன் இலங்கை அணியும் களம் காண உள்ளன.