இந்தியா - நியூசிலாந்து இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கெனவே முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, கிவீஸை வொயிட்வாஷ் செய்யுமா என்ற கேள்வியுடன் தொடங்கிய போட்டியில் அதிரடி காட்டி பதிலளித்துள்ளனர் நியூசிலாந்து வீரர்கள்.
அணியில் ஒரு மாற்றமாக பந்துவீச்சில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மயன்க் யாதவ் இடம் பெற்றிருந்தார். காயத்தில் இருந்து விடுபட்டு வந்த இஷான் கிஷான் உள்ளே வந்ததால் கடந்த போட்டியில் வான வேடிக்கை காட்டிய சூர்யவன்ஷி அணியில் இடம்பெறவில்லை.
முதல் மூன்று போட்டிகளைப் போல இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்தமுறை ரிசல்ட் வேறுமாதிரி இருந்தது.
இந்த தொடரின் எந்த போட்டியிலும் பிரகாசிக்காத டிம் சீஃபர்ட் இந்த முறையும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு ஓப்பனரான அதிரடியாக விளையாடிவந்தார். அவருக்கு இணையாக சிக்சர், பவுண்டரிகள் அடித்து வந்த டேரில் மிட்சல் 9 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். கொஞ்சம் நிதானித்த ஆலன், க்ளென் பிலிப்ஸ் உடன் கூட்டணி அமைத்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியைத் தொடர்ந்தார் பிலிப்ஸ். குறிப்பாக 11வது ஓவரில் அணியின் ரன்கள் 112 ஆக இருக்கும்போது தொடங்கிய பிலிப்ஸ் - பிரேஸ்வெல் கூட்டணி 18 வது ஓவர் முடிவதற்குள் அதனை 227 ரன்களாக உயர்த்தியது.
குறிப்பாக நீதீஷ் குமார் ரெட்டி வீசிய 16வது ஓவரில் 4 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு 2 என ரன்களை குவித்தார் பிலிப்ஸ். மறுபக்கம் பிரேஸ்வெல் 19 பந்துகளில் அரைசதம் எட்டினார். பிலிப்ஸ் 49 பந்துகளில் 10 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 107 ரன்களும், பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய ஆல் ரவுண்டர்கள் பந்துவீச்சில் பலமாக சோதப்பினர். குறைந்த பட்ச எக்கானமி ஓவருக்கு 14.33 ரன்கள்! பேட்ங்கிலும் 3 ஆல் ரவுண்டர்களும்
ஒட்டுமொத்தமாக 259 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து அணி. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன் சேர்த்த நாடாக உருவாக்கியிருக்கிறது நியூசிலாந்து.
சேசிங் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சோதப்பத் தொடங்கினர். சஞ்சு சாம்சன் இரண்டாவது பந்திலேயே விக்கெட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷான் டக் அவுட். ஓரளவு தொடக்கம் கிடைத்த பேட்ஸ்மேன்களும் உடனடியாக விக்கெட் இழக்க, அதிகபட்சமாக திலக் வர்மா 35 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.
அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், நமன் திர் போன்ற அதிரடி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.
சமீப நாட்களில் இந்திய அணி கண்ட மோசமான தோல்வி இதுவாகும். 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 87 ரன்கள் வித்தியாசத்தில்
தோல்வி. அடுத்த போட்டியில் வென்று வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அனி என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.