விளையாட்டு

FIFA உலகக்கோப்பை போட்டிக்கான குரூப் விவரங்கள் வெளியீடு

2022ஆம் ஆண்டிற்கான FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான குரூப் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Suaif Arsath

இந்த ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், கத்தார் நாட்டில், வரும் நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற உள்ளன.

இந்த நிலையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான பிரிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி, குரூப் G-ல் இடம்பெற்றுள்ளது. முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள், ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி குரூப் H மற்றும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி குரூப் C ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பலம்வாய்ந்த அணியான பிரான்ஸ் குரூப் D-ல் இடம்பெற்றுள்ளது.