விளையாட்டு

தனது ஓய்வை அறிவித்த ஹசிம் அம்லா...

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

39 வயதான ஹசிம் அம்லா தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9 ஆயிரத்து 282 ரன்கள் சேர்த்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 113 ரன்களை சேர்த்துள்ளார்.

இதேபோல், 44 டி20 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.