விளையாட்டு

தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மணன் நியமனம்

தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..  

Malaimurasu Seithigal TV

பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி, கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்ல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தலைமைத்துவ பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் பிசிசிஐயுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவர் பொறுப்பிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மணனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.