விளையாட்டு

CSK-வில்.. சாம்சன்- ருதுராஜ் ஓப்பனிங் காம்போவை மாத்துங்க பாஸ்.. என்ன லாஜிக் இது? - இப்படியே போனால்.. ம்ஹூம்!

ஆயுஷ் மாத்ரேவை ஒன்னு டவுண் இடத்திற்கு மாற்றி, ருதுராஜ் ஓபனிங் வந்தது ஒரு நல்ல முடிவாக தெரியவில்லை. காம்போவை மாற்றுவது குறித்த

மாலை முரசு செய்தி குழு

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க பாயிண்ட் டேபிளில் முன்னேற போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இன்னும் ஐபிஎல் மோட்க்கு வராத மாதிரி தொடர்ந்து சொதப்புகிறது. தொடக்கத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றதை அளித்தது.

இந்த நிலையில், அணியின் ஓப்பனிங் காம்போ தான் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல்-லில், அதே ஃபார்மை காட்ட முடியாமல் தவிக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 7 பந்துகளில் 6 ரன்கள், அடுத்த போட்டியிலும் 7 பந்துகளில் 7 ரன்கள் என தொடர்ந்து தோல்வி! நேற்றைய போட்டியிலும் பார்ட்லெட் வீசிய ஷார்ட் பாலை அடிக்க முயன்று, விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதுவே அவரது தற்போதைய நிலையை காட்டுகிறது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்-ம் 22 பந்துகளில் 28 என்ற மோசமான ரன்களுடன் வெளியேறினார். கெய்க்வாட் கடந்த ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிறைய முக்கியான போட்டிகளில் தனது இருப்பை காட்டி உள்ளார். ஆனால்  சாம்சன் உடனான பார்ட்னர்ஷிப் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருவரும் அணிக்கு முக்கியமான வீரர்கள் ஆனால் பவர் ப்ளேவில் தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறி தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டு கொண்டிருக்கிறார்கள்.  

நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சாம்சன் – ருதுராஜ் ஓப்பனிங் பார்ட்னாஷிப் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க முடியாமல் மீண்டும் பின்னடைவை உருவாக்கியது. “இந்த காம்போவே சரியா?” என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. போட்டிக்குப் பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்வாட்,“நாங்கள் நல்ல ஸ்கோர் அடித்தோம். வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய தாக்கம் இல்லை. ஸ்பின்னர்கள் தான் தாக்கத்தை ஏற்படுத்தினர். அதை சமாளிக்க முயன்றோம்,” என்றார். மேலும், “ராகுல் சஹாரை இம்பாக்ட் சப் ஆக கொண்டு வந்தோம். நூர் அகமதுவும் சேர்ந்து தாக்கம் ஏற்படுத்துவார்கள் என நினைத்தேன். ஆனால் இருவரும் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசவில்லை. அதனால் தான் தோல்வி,” என்றும் விளக்கம் அளித்தார்.

ஆனால், இந்த தோல்விக்கான காரணம் பந்துவீச்சு மட்டும் இல்லை, பேட்டிங் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சீசனில் ஓபனராக கலக்கிய ஆயுஷ் மாத்ரேவை ஒன்னு டவுண் இடத்திற்கு மாற்றி, ருதுராஜ் ஓபனிங் வந்தது ஒரு நல்ல முடிவாக தெரியவில்லை. காம்போவை மாற்றுவது குறித்த கேள்விகளுக்கு செவி சாய்த்து
ஓப்பனிங் பேட்ஸ் மேனை சரியாக தீர்மானித்தல் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தமாதிரி சாக்கு சொல்வதை கேப்டன் தவிருக்க்க முடியும் என தெரிகிறது. இந்த மாற்றம் மைதானத்தில் வேலை செய்யவில்லை என்பதால், மீண்டும் பழைய காம்போவுக்கு திரும்ப முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஆயுஷ் மாத்ரே மீண்டும் ஓபனராகவும், ருதுராஜ் ஒன் டவுன் இடத்திலும் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  இது அணியின் கம்பேக் பார்மை கொண்டுவரும்  முயற்சியாக பார்க்கப்படும்.

அதேபோல், ஷிவம் துபேவின் பேட்டிங் வரிசையையும் மாற்ற வேண்டியுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான  போட்டியில் 7ஆவது இடத்தில் இறங்கிய அவர்,  பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆடி பலமான இலக்கை நிர்ணயித்தர். ஆனால் என்ன பயன் ஓவர் வமுடிந்து வெளியேறினார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, பின்னர் பினிஷராக அதிரடியாக விளையாடும் அவரை சரியாக பயன்படுத்த முடியாமல் கோட்டைவிடுகிறது சென்னை அணி. அவரின் ஆர்டரை மாற்றினால் துபே ஸ்டைலில் மாற்றம் காணப்பட்டு அணிக்கு பலம் சேர்க்கலாம். 

சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் பலமிக்க அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த போட்டிகளிலும் சிஎஸ்கே சொதப்பினால், விமர்சனங்கள் இன்னும் கடுமையாகும். ஏற்கனவே கடந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் 10வது இடத்தில் இருந்த சிஎஸ்கே, இந்த சீசனிலும் அதே பாதையைத் தொடர முடியாது. ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமெனில், இந்த மாற்றங்கள் உடனடியாக கருத்தில் கொண்டு மாற்றத்தை கொடுக்கமுற்படவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.