விளையாட்டு

வட போச்சே குமாரே!!.. படாத இடத்தில் பட்ட பந்து.. வீரரின் நிலை என்னவோ..?

இந்தியா - இலங்கை எதிரான 3 வது டி20 போட்டியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது. இந்தியா அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது இலங்கை அணி.

முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் பந்துவீச்சில் இலங்கை அணி பவர் பிளேவில் 18 ரன்களுக்கு 3 விக்கட்களை இழந்து தடுமாறி வந்தது. மேலும் இந்தியா அணியின் ஃபில்டிங் செம்ம ஸ்ட்ரோங்காக இருந்தது.

குறிப்பாக தினேஷ் சந்திமால் அடித்த கட் ஷாட்டில், பந்து வந்த புல்லட் வேகத்தில், அதனை வெங்கடேஷ் ஐயர் அபாரமாக பிடித்தார்..

ஆனால் பந்தை பிடிக்கும் போது அது படாத இடத்தில பட்டது. இதனால், வலியில் துடித்த அவரை பார்த்து அனைவரும் சிரித்தனர். அவரும் வலியை சிரிப்பால் சமாளித்தார். பின்னர் சக வீரர்கள் அவரை தட்டிக்கொடுத்து... கிண்டல் செய்ய, அவர் மீண்டும் உற்சாகத்துடன் ஃபில்டிங்கில் ஈடுபட்டார்.