இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் முதல் முறை மோதிக்கொள்ளும் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதுவரை இந்தியா அணியுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட கூட தகுதி பெறாத அணியாக இருந்த ஜப்பான், இன்று உலகின் சிறந்த வீரர்களுக்கு தோல்வி பயத்தைக் காட்டியிருக்கிறது.
2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பெற்றிருந்தாலும், ஒரு பெரிய அவமானத்தில் இருந்து ஜஸ்ட் மிஸ் ஆகியிருக்கின்றனர் என்றுதான் கூற வேண்டும்.
இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கவிருந்த போட்டிகள் மைதானம் ஈரமாக இருந்ததால் 12:48-க்கு, 5 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டு தொடங்கியது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 9 ரன்கள் அடித்து வெளியேறினார்.
இஷான் கிஷனும் 3(6) ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16(12) ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவராக இன்னிங்ஸை நிறைவு செய்தார்.
33 ரன்கள் என்ற இலக்குடன் ஜப்பான் களமிறங்கியது. இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் தருவாயில் ஜப்பான் இருந்தது.
இருப்பினும், அக்சர் படேல் அந்த ஓவரில் ஐந்து ரன்களை விட்டுக்கொடுத்ததால், ஜப்பான் அணி 30/3 என்ற ஸ்கோருடன் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பான் பெண்கள் அணியை எதிர்கொண்டது இந்திய பெண்கள் அணி. முதலில் பேட்டிங்க் செய்த ஜப்பானை 57 ரன்களில் ஆல் அவுட் செய்து, ஐந்தே ஓவர்களில் 59 ரன்கள் அடித்து அதிரடியாக வென்றது இந்திய அணி.
இதேப் போன்ற முடிவே இன்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழையும் ஜப்பான் அணியும் இந்திய அணிக்கு மறக்க முடியாத சர்பிரைஸ் கொடுத்துள்ளன.
இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக 200வது டி20 வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்