“ஆரம்பித்த சஞ்சு சாம்சன்.. முடித்து வைத்த நமன் திர்!” - கிவீஸ் மண்ணில் இந்தியாவின் அதிரடி வெற்றி.. விமர்சனங்களுக்கு இதுதான் பதில்! BCCI
விளையாட்டு

“ஆரம்பித்த சஞ்சு சாம்சன்.. முடித்து வைத்த நமன் திர்!” - கிவீஸ் மண்ணில் இந்தியாவின் அதிரடி வெற்றி.. விமர்சனங்களுக்கு இதுதான் பதில்!

அதிரடியான அரை சதத்துடன் வெற்றிக்கு அடித்தளமிட்ட சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Antony Ajay R

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 225 ரன்கள் அடித்து, 226 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தது.

இந்திய ஓப்பனர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா, பவர் பிளேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் எதுவும் இழக்காமல் 82 ரன்கள் எடுத்தனர்.

அடுத்த ஓவரில், 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 29 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மா விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன், 33 பந்துகளில் 67 ரன்கள் குவித்து போல்ட் ஆனார். அடுத்த ஓவரிலேயே திலக் வர்மாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷனும் விக்கெட்டை இழக்க, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தடுமாறியது.

இந்திய அணிக்குத் தேவையான ஸ்திரத்தன்மையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வழங்கினார். இறுதியில், நமன் திர் அதிரடியாக 15 பந்துகளில் 42 ரன்கள் குவிக்க, இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காதது, சுழற்பந்து வீச்சாளர்களை பெஞ்சில் அமர வைத்தது, 3 ஆல்-ரவுண்டர்களுடன் களமிறங்கியது போன்ற விமர்சனங்களுக்கு வெற்றியின் மூலம் பதிலளித்துள்ளார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.

அதிரடியான அரை சதத்துடன் வெற்றிக்கு அடித்தளமிட்ட சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதன் மூலம், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அடுத்த போட்டி அக்டோபர் 24-ம் தேதி, சனிக்கிழமை நடைபெற உள்ளது.