விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, வரும் 24-ம் தேதி தமது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி, துபாயில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.  2-வது பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றது.