விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி...தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி...!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கணை உள்ளிட்ட இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 

Tamil Selvi Selvakumar

அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய அணி முதலாவது சுற்றில் 94 புள்ளி 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

இரண்டாவது தகுதிச்சுற்றில் சற்று பின்தங்கியபோதும், இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி டென்மார்க்கை எதிர்கொண்டது. இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். 

ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட இந்திய அணி குரோஷியாவிடம் தோல்வியைத் தழுவி வெண் கலப்பதக்கம் வென்றது.