டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், உலக கிரிக்கெட் அரங்கில் தனது ஆதிக்கத்தையும் மீண்டும் நிரூபித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய இந்தியா அணி சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தால் அரை சதம் அடித்தனர். தொடர்ந்து இருவரும் 16 வது ஒவேரில் ஆட்டமிழக்க ரசிகர்களிடம் சிறு பதட்டம் ஏற்பட்டது. அதே ஓவரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆக இதனால் ரன் வேகம் வெகுவாக குறைந்தது.
பின் கடைசி ஒவேரில் களமிறங்கிய சிவம் துபே காட்டிய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி ஒரு மிகப்பெரிய இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 20 வது ஓவரை முழுமையாக எதிர்கொண்ட அவர், நியூசிலாந்து நீஷம் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அந்த ஓவரில் மட்டும் அவர் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களை பெற்றுத் தந்தார்.
இறுதி நேர அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 255 ரன்கள் என்ற பாதுகாப்பான ஸ்கோரை இலக்காகியது . உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இது மிகச்சிறந்த ஸ்கோராக அமைந்தது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சில முடிவுகள் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக டாஸ் வென்றபின்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அதேபோல், முக்கிய வீரரான மெக்கான்கீயை பிளேயிங் லெவனில் சேர்க்காத முடிவும் பலரிடையே கேள்வியை ஏற்படுத்தியது. மேலும், பவர்பிளே ஓவர்களில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து வெளியே பந்துகளை வீசிக்கொண்டிருந்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எளிதாக ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. முதல் 7.2 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியது மற்றும்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய மூவரும் அரைசதம் கடந்ததே பெரும் பலத்தை குவித்தது. சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்களும், 25 பந்துகளில் 54 ரன்ளும் மற்றும் அபிஷேக் சர்மா வெறும் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மூன்று டி20 உலகக்கோப்பை வென்ற ஒரே அணி எனும் சாதனையும் இந்தியா படைத்தது, மேலும் தொடர்ந்து இரண்டாவது டி20 உலகக்கோப்பை வென்ற அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்