விளையாட்டு

“IPL சம்பளம் மட்டுமல்ல.. விராட் முதல் பும்ரா வரை!" முதல் இடத்தில் 300 கோடி குவிக்கும் வீரர் யார்? டாப் 5 லிஸ்ட்

முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை அவரது வருமானத்திற்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன

Muthu Lakshmi

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் சீசனில் மட்டுமின்றி, விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா ஆகியோர் அதிக வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். 2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகளின்படி, இவர்களின் வருமானம் பல கோடிகளை தாண்டுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் களத்தில் மட்டுமின்றி தனியார் விளம்பரதாரர் ஒப்பந்தங்கள் மூலமாகவும் வருமானத்தை ஈட்டுகிறார். அந்த வகையில் அவரது ஆண்டு வருமானம் ₹320 கோடியை தாண்டும் என மதிப்பிடப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் - RCB அணிக்காக விளையாடும் கோலி, அதன் மூலம் ஆண்டுக்கு ₹21 கோடி ஊதியம் பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Virat Kohli

இதுதவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வழங்கும் ஒப்பந்தத் தொகை, சர்வதேசப் போட்டிகளுக்கான கட்டணங்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை அவரது வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக . Puma, MRF உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தங்களில் நடிப்பதற்காக கோலி, 30-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சம்பளமாக ₹250 கோடிக்கும் அதிகமாக ஈட்டுவதாக கணிக்கப்படுகிறது.

Rohit sharma

விராட் கோலியை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவின் ஆண்டு வருமானம் சுமார் ₹150 கோடி முதல் ₹180 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்காக விளையாடுவதன் மூலம் அவர் ₹16.30 கோடி ஐபிஎல் சம்பளம் பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனுடன் பிசிசிஐ ஒப்பந்தத் தொகை, சர்வதேசப் போட்டிகளுக்கான கட்டணங்கள் மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் ஆகியவை அவரது வருமானத்திற்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பெற்றுள்ள புகழ், விளம்பரத் துறையிலும் அவருக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Rishabh Pant

இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்தின் ஆண்டு வருமானம் சுமார் ₹125 கோடி முதல் ₹145 கோடி வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி அவரை ₹27 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது அவரது ஐபிஎல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இதுதவிர, பிசிசிஐ ஒப்பந்தத் தொகை, சர்வதேசப் போட்டிகளுக்கான கட்டணங்கள் மற்றும் பல்வேறு லைஃப்ஸ்டைல் பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும் அவர் வருமானம் ஈட்டுகிறார். காயத்திலிருந்து மீண்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பந்த், இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

Shreyas Iyer

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆண்டு வருமானம் சுமார் ₹100 கோடி முதல் ₹115 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியுடன் ₹26.75 கோடி மதிப்பிலான ஐபிஎல் ஒப்பந்தம் செய்தது அவரது வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிசிசிஐ ஒப்பந்தம், சர்வதேசப் போட்டிகளுக்கான கட்டணங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் ஃபேஷன் பிராண்டுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவையும் அவரது வருவாய் ஆதாரங்களாக உள்ளன. ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடுகள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரது வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன.

Jasprit Bumrah

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் ஆண்டு வருமானம் சுமார் ₹90 கோடி முதல் ₹110 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் அவர், ஆண்டுக்கு ₹18 கோடி ஐபிஎல் சம்பளம் பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனுடன் பிசிசிஐ ஒப்பந்தத் தொகை, சர்வதேசப் போட்டிகளுக்கான கட்டணங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் அவரது வருமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தனது துல்லியமான பந்துவீச்சால் உலக அளவில் கவனம் பெற்றுள்ள பும்ரா, விளம்பர நிறுவனங்களின் விருப்பமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் உள்ளார்.

இந்த மதிப்பீடுகளின்படி, ₹320 கோடிக்கும் அதிகமான ஆண்டு வருமானத்துடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுகின்றனர். ஐபிஎல் ஒப்பந்தங்கள், சர்வதேச கிரிக்கெட், பிசிசிஐ ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பர வருவாய் ஆகியவை இவர்களின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வருமான தரவரிசை அவர்களின் ஒப்பந்தங்கள் மற்றும் ஊதியங்களை கொண்டு தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட வருமான கணக்குகள் அல்ல. வீரர்களின் உண்மையான வருமானம் ஒப்பந்தங்கள், விளம்பரங்கள் மற்றும் பிற வருவாய் ஆதாரங்களை பொறுத்து மாறுபடலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்