விளையாட்டு

காதல் ஒருநாள் உங்களையும் வந்தடையும்! IPLல் ரசிகர் தொலைத்த ப்ரோபோசல் மோதிரம்... கடைசில இதுதான் ட்விஸ்டே

நிலவிய உற்சாகமான சூழலுக்கு மத்தியில் மண்டியிட்டுத் தன் காதலிக்குத் தன் காதலை தெரிவிக்கும் முயற்சியை மேற்கொண்டார்..

மாலை முரசு செய்தி குழு

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஆட்டம், ஆடுகளத்திலும், வெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தில் 'அவுட்' ஆகும் நிலைக்கு சென்ற மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ஒருவர் அபார வெற்றி அடைந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் காலம் காலமாக நடந்து வரும் அழகான விஷயம்தான் 'திருமண ப்ரோபோசல்கள்'. அந்த வரிசையில் இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற போட்டிக்கு மத்தியில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், மும்பையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், அங்கு நிலவிய உற்சாகமான சூழலுக்கு மத்தியில் மண்டியிட்டுத் தன் காதலிக்குத் தன் காதலை தெரிவிக்கும் முயற்சியை மேற்கொண்டார். அந்த அழகான தருணத்தில் மோதிரம் அவரது விரல்களில் இருந்து நழுவி கூட்டத்திற்குள் மறைந்து போனது. இதனையடுத்து, அருகிலிருந்த ரசிகர்கள் பதற்றத்துடன் தேடத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் குழப்பத்தில் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக, உடன் இருந்த பார்வையாளர்கள் அந்த மோதிரத்தை மீட்டுத் திருப்பிக் கொடுத்தனர். இதனால், அந்த நபர் தனது திருமணப் ப்ரோபோசலை வெற்றிகரமாக தனது காதலியிடம் கூறி முடித்தார். இதனை KKR அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் கூட இந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் ரசிகரான அவருக்கு நேற்று இரவு இதனால் இரட்டிப்பு சந்தோசம் கிடைத்துள்ளது எனலாம். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிகெல்டன் ஆகியோரின் அதிரடியான அரைசதங்களின் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடக்க ஆட்டங்களில் தொடர்ச்சியாக 13 சீசன்களாகத் தோல்வியடைந்த தங்களது தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் எழுத தொடங்கியுள்ளது. மேலும்,

ஐபிஎல்-இல் இதுபோன்ற தருணங்களுக்கு நீண்ட காலமாகவே நடந்துவருகிறது. எதிரெதிர் சீருடைகள், நிரம்பி வழிந்த மைதானம், மற்றும் கைநழுவிப் போகும் தருவாயில் இருந்து மீண்டும் கைக்கு வந்த ஒரு திருமண ப்ரோபோசல் என அந்த இரவுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போனது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.