விளையாட்டு

மீண்டும் முதலிடத்தை பிடித்தார் மிதாலிராஜ்...

தரவரிசை பட்டியலில் மிதாலிராஜ் மீண்டும் முதலிடம்!

Malaimurasu Seithigal TV
பெண்கள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணிக் கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. 
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக 8ஆவது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் விளாசியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ இடத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.