விளையாட்டு

விராட் கோலி 120 சதங்களை விளாசும் முன் திருமணம் செய்திருக்க கூடாது-சோயப் அக்தர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

Tamil Selvi Selvakumar

விராட் கோலி, 120 சதங்களை விளாசும் முன் திருமணம் செய்திருக்க  கூடாது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கு பிசிசிஐயுடன் இருக்கும் கருத்து வேறுபாடே காரணம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பவுலர் அக்தர், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென் என்றும், உலக கிரிக்கெட் வீரர்களை விட அவர் அதிகம் சாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர் 120 சதங்களை விளாசிய பின்னர்   திருமணம் செய்திருந்திருக்கலாம் என கூறிய அவர், தான் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தால், இதையே செய்திருப்பேன் எனவும் கூறியுள்ளார்.  

இதனிடையே இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், தனிநபரின் வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என பதிவிட்டுள்ளனர்.