மாற்றுத்திறனாளிகளுக்கென நடைபெற்ற டோக்கியோ பாரலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்று 5 தங்கம் உள்பட 19 பதக்கங்களைவ வென்றனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் வீரர்களுடன் தனித்தனியே கலந்துரையாடிய மோடி அந்தந்த விளையாட்டுகளில் சாதனை படைக்கவும் வாழ்த்தினார். முன்னதாக வீரர்களை தனித்தனியே சந்தித்து அவர்களுக்கு பதக்கங்களை அணிவித்த மோடி, அவர்கள் பரிசளித்த பேட்மிண்டன் மட்டை, வட்டு, வாசகங்கள் எழுதப்பட்ட டி-ஷார்ட், கிருஷ்ணர் பொம்மை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டார்.