விளையாட்டு

1 ஆண்டில் 1000 ரன்களை கடந்த முதல் மேட்ஸ் மேன்...ஐசிசி விருதுக்கு தேர்வான இந்திய வீரர்...!

Tamil Selvi Selvakumar

2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரரான சூர்யா குமார் யாதவ், கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் 31 தொடர்களில் விளையாடி 46.56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1164 ரன்கள் எடுத்துள்ளார்.  

இதன்மூலம் ஒரு வருடத்தில் 20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சிறப்பை சூர்யா குமார் யாதவ் பெற்றிருந்தார்.  

மேலும், கடந்த ஆண்டில் யாதவ் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் 68 சிக்ஸர்களையும், இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களையும் அடித்து, கடந்த ஆண்டு முழுவதும் தான் களமிறங்கிய போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 

இந்நிலையில் தற்போது, 2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

As @surya_14kumar becomes the ICC Men’s T20I Cricketer of the Year 2️⃣0️⃣2️⃣2️⃣, relive the best of SKY and hear his special message after receiving the award