விளையாட்டு

டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - இந்தியா, ஆஸ்., மோதல்  

உலகக் கோப்பை டி20 போட்டியின் இந்தியா தனது 2 வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Malaimurasu Seithigal TV

உலகக் கோப்பை டி20 போட்டியின் இந்தியா தனது 2 வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24ம் தேதி சந்திக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி  தனது  முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. இதனிடையே  இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் இரண்டாவது  பயிற்சி ஆட்டத்தில்  ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.