விளையாட்டு

இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறாத ஐ.சி.சியின் டி20 அணி - ரசிகர்கள் அதிர்ச்சி!!!

ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில், மிகவும் மதிப்புமிக்க டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் மட்டுமே  இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்திய வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை. இதைப்போல மேற்கு இந்தியத்தீவுகள் அணியை சேர்ந்த வீரர்களும் இடம்பெறவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறாததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.